லெட்சுமிநாரயாணபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலெட்சுமிநாராயணபுரம் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்த ஒரு குக்கிராமம். இது சரியான பாதை வசதியற்ற ஒரு சிறிய கிராமம். இங்கு மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகளாவர். இங்குள்ள மக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளார்கள்.

அமைவிடம்[தொகு]

இங்கு வாழும் மக்கள் பெரும்பாலானோர் சிவனையும் விஷ்ணுவையும் வணங்குகின்றனர். இந்த ஊர் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இங்கு மு. கருணாநிதி அவர்கள் இறுதியாக 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் நின்று வென்றார். இது மன்னார்குடி என்ற ஊருக்கு கிழக்கே சுமார் 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. மேலும் திருத்துறைப்பூண்டி என்ற ஊருக்கு வடக்கே சுமார் 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் உள்ளது.

தற்போது இந்த கிராமத்திற்கு புதிய சாலை வசதிகள் செய்யப்பட்டு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. இ்ந்த கிராமத்திற்கு மிக அருகில் புகழ் பெற்ற அருள்மிகு பொங்குசனீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது.

வரலாற்றுச் சிறப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெட்சுமிநாரயாணபுரம்&oldid=3757858" இலிருந்து மீள்விக்கப்பட்டது