லீப் நொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீப் விநாடியின்போதான இணையத்தளத் திரைப்படம்

லீப் நொடி அல்லது லீப் வினாடி (leap second) என்பது பருவ மற்றும் வானவியல் ஆண்டுடன் நாட்காட்டியை ஒருமுகப்படுத்தும் நோக்கில் கூடுதலாக ஓர் ஆண்டில் அமுல்ப்படுத்தப்படும் கால அளவு ஆகும். சர்வதேச நேரமானது சூரிய நேரத்திற்கு அண்மித்து அமைவதற்காக லீப் நொடி அமுல்படுத்தப்படுகின்றது. இந்நொடி இடம்பெறாவிடின் புவிச்சுழற்சியை அளவிடுகின்ற அணுக்கடிகாரத்தின் நேரத்துடன் சாதாரண நேரம் பொருந்தாமல் போய்விடும். பின் புவிச் சுழற்சி வீதத்திலும் மாற்றங்கள் இடம்பெறும். ஆகையாலேயே 1972 ஆம் ஆண்டு முதல் இக்கால அளவு அறிமுகம் செய்யப்பட்ட காலம் முதல் இவ்வாறு 27 லீப் நொடிகள் சர்வதேச நேரத்தில் சேர்க்கப்பட்டன. அதன்பின்னர் தற்போது 2016 திசம்பர் 31 23:59:60 இல் ஒரு லீப் நொடி சேர்க்கப்பட்டது.[1] அடுத்த லீப் நொடி 2018 இன் பின்னரேயே அறிவிக்கப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bulletin C 52". IERS. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீப்_நொடி&oldid=2162471" இலிருந்து மீள்விக்கப்பட்டது