உள்ளடக்கத்துக்குச் செல்

லிமரிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லிமரிக்(Limerick) ஆங்கிலத்தில் தோன்றிய, ஐந்து வரிகள் கொண்ட சிறிய கவிதை. லிமரிக்கின் ஐந்து வரிகளில் முதலாவது, இரண்டாவது, ஐந்தாவது ஆகிய வரிகளில் ஒத்த ஓசை உடைய இயைபுத் தொடையுடன் அமையும்; மூன்றாவது நான்காவது வரிகளில் தம்முள் ஒத்த ஓசை உடைய இயைபுத் தொடைகளும் வரும். ஐந்தாவது வரியாக மிகுதியும் முதல் வரியே (திரும்பவும்) வந்திருக்கும்.[1]

மஹாகவி இயற்றிய லிமரிக்:

"கற்பகத்தின் வெண்கழுத்திற் தாலி
கட்டுதற்கு முன்னின்றான் வாலி
அற்புதமாய் வாழ்ந்தார்கள்
ஆறு பிள்ளை பெற்றார்கள்
இப்பொழுதோ வேறு சோலி"

ஆதாரங்கள்

[தொகு]
  1. தமிழ் இணையக் கல்விக்கழகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிமரிக்&oldid=1367645" இலிருந்து மீள்விக்கப்பட்டது