லிண்டெர்ஹோஃப் அரண்மனை
லிண்டெர்ஹோஃப் அரண்மனை(Linderhof Palace (இடாய்ச்சு மொழி: Schloss Linderhof) என்பது ஜெர்மனியின், தென்மேற்கு பவேரியாவில் எல்டால் அபேவுக்கு அருகில் உள்ள ஒரு அரண்மனை. இது பவேரியா மன்னர் இரண்டாம் லூத்விக் கட்டிய மூன்று அரண்மனைகளில் சிறியது ஆகும். மேலும் அவர் வாழ்நாளிலேயே முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட ஒரே அரண்மனையும் ஆகும்.
இந்த அரண்மனையில் கண்ணாடிகள் நிரம்பிய ஒரு கூடம், இசைக்கூடம், சந்திப்புக் கூடம், உணவுக்கூடம், அலங்கார விளக்குகள், அதிசயக்கும் ஓவியங்கள், அழகிய நீரூற்றுகள், அழகு தோட்டங்கள் என்று கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அரண்மனைக்குள் வீனஸ் கிராட்டோ என்ற சிறு குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குளத்தில் அன்னப் பறவை வடிவிலான தங்கப் படகில் மன்னர் லுட்விக் பயணம் செய்து மகிழ்ந்தார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ முகில் (14 மார்ச் 2018). "பவேரியா கட்டிடங்கள்: கனவுக் கோட்டைகள்!". கட்டுரை. தி இந்து தமிழ். 3 ஏப்ரல் 2018 அன்று பார்க்கப்பட்டது.