லாலாப்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இலாலாப்பேட்டை என்பது கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராகும்[1] [2]. இங்கு விவசாயமே முதன்மைத் தொழிலாகும். மண்வளமும் நீர்வளமும் இருப்பதால் வாழை, கரும்பு, நெல் மற்றும் வெற்றிலை என நன்செய் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. குறிப்பாக வாழையே இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. குளித்தலைக்கு மேற்கே இலாலாப்பேட்டையிலிருந்து கிழக்கே நங்கவரம் வரையிலான பகுதிகளில் பயிரிடப்படும் பல்வேறு தரப்பட்ட வாழை ரகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களாகிய கேரளா, கர்நாடகாவிற்கும் ஏற்றுமதியாகிறது.

ஆதாரம்[தொகு]

  1. http://www.tnpolice.gov.in/station_details.php?stype=LS&code=2957846&desc=LALAPETTAI
  2. http://www.tnpolice.gov.in/District_Details.php?code=29578
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாலாப்பேட்டை&oldid=3645282" இலிருந்து மீள்விக்கப்பட்டது