ரோசா வித்யாதர் தேசுபாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோசா வித்யாதர் தேசுபாண்டே
Roza Vidyadhar Deshpande
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
25 சூலை 1973 – 21 மே 1977
முன்னையவர்இராமச்சந்திர தோந்திபா பண்டாரே
பின்னவர்அகில்யா ரங்னேகர்
தொகுதிவடமத்திய மும்பை மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1929
மும்பை, இந்தியா
இறப்பு19 செப்டம்பர் 2020(2020-09-19) (அகவை 90–91)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
துணைவர்பானி தேசுபாண்டே
பிள்ளைகள்ஒரு மகன், ஒரு மகள்
பெற்றோர்

ரோசா வித்யாதர் தேசுபாண்டே (Roza Vidyadhar Deshpande) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1929 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார்.[1] ஐக்கிய இந்திய பொதுவுடைமை கட்சியின் இந்திய அரசியல்வாதியாகச் செயல்பட்டார். 1980 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை அகில இந்திய பொதுவுடைமைக் கட்சியிலும் அதற்கு முன்பு இந்திய பொதுவுடைமைக் கட்சியிலும் தொடர்பு கொண்டிருந்தார்..

குடும்ப பின்னணி மற்றும் கல்வி[தொகு]

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் நிறுவன உறுப்பினரும் இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் தீவிரமானவருமான சிறீபாத் அம்ரித் தாங்கேவின் மகளாக இவர் பிறந்தார். இவரது தாயார் பெயர் உசாபாய் தாங்கே என்பதாகும். உசாதை என்று இவர் பிரபலமாக அறியப்பட்டார். பொதுவுடைமை தொழிற்சங்கத் தலைவராகவும் இவர் செயல்பட்டார். தனது தந்தையின் முதல் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.[1]

பொதுவுடைமை கட்சித் தலைவர் வித்யாதர் இலட்சுமண் தேசுபாண்டே என்ற பானி தேசுபாண்டேவை ரோசா வித்யாதர் திருமணம் செய்து கொண்டார்.[2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

ரோசா வித்யாதர் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளராக பம்பாய் மத்திய தொகுதியில் இருந்து 5 ஆவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

ரோசா வித்யாதர் தேசுபாண்டே மகாராட்டிரா மாநிலத்தை உருவாக்குவதற்கான இயக்கமான சம்யுக்த மகாராட்டிரா இயக்கத்திலும் கோவா விடுதலைப் போராட்டத்தில் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் பங்கேற்றார்.[4][5][6]

இறப்பு[தொகு]

ரோசா தேசுபாண்டே 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அப்போது அவளுக்கு 91 வயது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Tare, Kiran (7 May 2011). "Netaji's Friend in Deed". India Today. http://indiatoday.intoday.in/story/roza-deshpande-biography-on-amrut-dange-will-expose-communists-in-india/1/137305.html. பார்த்த நாள்: 7 December 2015. Tare, Kiran (7 May 2011). "Netaji's Friend in Deed". India Today. Retrieved 7 December 2015.
  2. "Bani Deshpande Is No More". Mainstream Weekly. http://www.mainstreamweekly.net/article6146.html. 
  3. "Fifth Lok Sabha – State wise Details – Maharashtra". Lok Sabha Secretariat. பார்க்கப்பட்ட நாள் 7 December 2015.
  4. "In memory of Mumbai’s Red Rose: Roza Deshpande’s death marks the end of an era of stalwarts who empowered the working class". Mumbai Mirror. https://mumbaimirror.indiatimes.com/others/sunday-read/in-memory-of-mumbais-red-rose/articleshow/78209226.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst. 
  5. "Champion of woman labourers, veteran Communist leader Roza Deshpande dies". இந்தியன் எக்சுபிரசு. https://indianexpress.com/article/cities/mumbai/champion-of-woman-labourers-veteran-communist-leader-roza-deshpande-dies-6602807/. 
  6. "Roza Deshpande Was the Last of the Indian Communist Stalwarts". The Wire (India). https://thewire.in/labour/roza-deshpande-was-the-last-of-the-indian-communist-stalwarts. 
  7. "Communist veteran Roza Deshpande passes away at 91". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. https://www.newindianexpress.com/nation/2020/sep/19/communist-veteran-roza-deshpande-passes-away-at-91-2199155.html.