உள்ளடக்கத்துக்குச் செல்

ரேமண்ட் கேட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேமண்ட் கேட்டல்
ரேமண்ட் பெர்னார்ட் கேட்டல்
ரேமண்ட் பெர்னார்ட் கேட்டல்
பிறப்பு (1905-03-20)20 மார்ச்சு 1905
ஹில் டாப், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ், பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்) அருகில், இங்கிலாந்து
இறப்பு2 பெப்ரவரி 1998(1998-02-02) (அகவை 92)
ஹொனலுலு, ஹவாய், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
தேசியம்பிரித்தானியார் மற்றும் அமெரிக்கர்
துறைஉளத்தியல்
துறை ஆலோசகர்பிரான்சிஸ் ஆவெலிங், கிங்ஸ் கல்லூரி, இலண்டன்
அறியப்பட்டது16 ஆளுமைக் கூறுகள், மாறக்கூடிய மற்றும் நிலைத்த தன்மையுடைய நுண்ணறிவு,

ரேமண்ட் பெர்னார்ட் கேட்டல் (Raymond Bernard Cattell) (20 மார்ச் 1905 - 2 பிப்ரவரி 1998) ஒரு பிரித்தானிய மற்றும் அமெரிக்க உளவியலாளர் ஆவார். அவர் தனிமனிதனின் அகத்திற்குள் நிகழும் உளவியல் கட்டமைப்பைப் பற்றிய உள அளவியல் ஆராய்ச்சிக்குப் பெயர் பெற்றவர் ஆவார்.[1][2] ஆளுமை மற்றும் மனோபாவத்தின் அடிப்படைப் பரிமாணங்கள், அறிவாற்றல் திறன்களின் வீச்சு, உந்துதல் மற்றும் உணர்ச்சியின் மாறும் பரிமாணங்கள், அசாதாரண ஆளுமையின் மருத்துவப் பரிமாணங்கள், சமூக நடத்தை முறைகள்,[3] உளவியல் சிகிச்சை மற்றும் கற்றல் கோட்பாடுகளுக்கு ஆளுமை ஆராய்ச்சியின் பயன்பாடுகள் [4] படைப்பாற்றல் மற்றும் சாதனை ஆகியவற்றைக் கணிக்கும் உத்திகள்,[5] மற்றும் பல்மாறி ஆய்வு முறைகள்[6]ஆகிவற்றை அவரது படைப்புகள் ஆராய்ந்தன.

ஆளுமை, உந்துதல் மற்றும் அறிவாற்றல் திறன்களின் அடிப்படை பரிமாணங்களை அனுபவ ரீதியாக ஆராய்வதற்கு "அகநிலை வாய்மொழி கோட்பாடு" என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக காரணி பகுப்பாய்வு முறைகளைப் பயன்படுத்துவதற்கான ஆரம்ப ஆதரவாளராகக் கேட்டல் இருந்தார். காரணி பகுப்பாய்வின் கேட்டலின் பயன்பாட்டின் முடிவுகளில் ஒன்று, சாதாரண ஆளுமைக் கோளத்திற்குள் (பண்பு அகராதி அடிப்படையில்) 16 தனித்தனி முதன்மை பண்புக் காரணிகளைக் கண்டுபிடித்தது ஆகும். [7] இந்தக் காரணிகளை அவர் "மூலப் பண்புகள்" என்று அழைத்தார். [8] ஆளுமைக் காரணிகளின் இந்தக் கோட்பாடு மற்றும் அவற்றை அளவிடப் பயன்படுத்தப்படும் சுய அறிக்கை கருவி முறையே 16 வகை ஆளுமைக்கூறு காரணி மாதிரி மற்றும் 16 ஆளுமைக் கூறு கேள்வித்தாள் எனவும் அழைக்கப்பட்டன. [9]

மற்ற உளவியல் களங்களின் அடிப்படைப் பரிமாணங்களில் தொடர்ச்சியான அனுபவ ஆய்வுகளையும் கேட்டல் மேற்கொண்டார். அவை: நுண்ணறிவு, [10] உந்துதல், [11] தொழில் மதிப்பீடு மற்றும் தொழில் ஆர்வங்கள் போன்றவை ஆகும். [12] மனித அறிவாற்றல் திறனை விளக்குவதற்கு இயங்குநிலையிலுள்ள மற்றும் நிலைப்படுத்தப்பட்ட நுண்ணறிவு இருப்பதைக் கேட்டல் கோட்பாடாக்கினார்.[13] நுண்ணறிவின் மீது எழுத்து வடிவ மொழி மற்றும் கலாச்சார பின்னணியின் சார்புகளைக் குறைக்க கலாச்சாரக் குறுக்கீடற்ற நுண்ணறிவுச் சோதனையை உருவாக்கினார். [14]

புதுமைகளும் மற்றும் சாதனைகளும்

[தொகு]

கேட்டலுடைய ஆய்வுகள் முக்கியமாக ஆளுமை, திறமைகள், ஊக்கப்படுத்துதல் மற்றும் புதுமையான பல்மாறி ஆய்வு முறைகள் மற்றும் புள்ளியியல் பகுப்பாய்வு (குறிப்பாக காரணி பகுப்பாய்வு முறையைச் சார்ந்த மேம்படுத்துதல் நடவடிக்கைககள்) போன்றவற்றைச் சார்ந்ததாகும்.[15] அவருடைய ஆளுமை தொடர்பான ஆய்வுகளில் அவர் உருவாக்கிய 16 காரணி ஆளுமை மாதிரிக்காக நன்கறியப்பட்டவர் ஆவார். இரண்டு அல்லது மூன்று பரிமாண நடத்தைகளை மட்டுமே பார்ப்பதன் மூலம் ஆளுமையைப் புரிந்து கொள்ள முடியும் என்ற ஐசென்கின் கருத்தை கேட்டல் ஏற்கவில்லை. அதற்கு பதிலாக, ஒருவரின் ஆளுமையின் முழுமையான பிம்பத்தைப் பெறுவதற்கு மிகப் பெரிய எண்ணிக்கையிலான பண்புகளைப் பார்ப்பது அவசியம் என்று அவர் வாதிட்டார். 16 ஆளுமைக் காரணிகளை அளப்பதற்கான வினாநிரல் ஒன்றையும் உருவாக்கினார். [8] முதல் மட்டத்தில் பல அடிப்படை முதன்மைக் காரணிகளையும், ஆளுமை அமைப்பின் உயர் மட்டத்தில் குறைவான, பரந்த, இரண்டாம்-வரிசைக் காரணிகளையும் கொண்ட ஒரு படிநிலையை, பல நிலை ஆளுமையை அவர் முதலில் முன்மொழிந்தார்.[16]கேட்டல், காரணி வகைப்பாடு முறையினைப் பயன்படுத்தி உளபண்புக்கூறுகளை ஆதாரப்பண்பு கூறுகள் மற்றும் மேற்பரப்புப் பண்பு கூறுகள் என வகைப்படுத்தினார். 16 காரணிகளில் சார்பிலாக் காரணிகள் (அ) முதன்மைப் பண்புகள் பன்னிரெண்டும், பகுதி சார்பிலாக காரணிகள் (அ) துணைப் பண்புகள் நான்கும் அடங்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
 1. Gillis, J. (2014). Psychology's Secret Genius: The Lives and Works of Raymond B. Cattell. Amazon Kindle Edition.
 2. Festschrift for Raymond B. Cattell (1988). The Analysis of Personality in Research and Assessment: In Tribute to Raymond B. Cattell. (2 April, & 17 June 1986). University College London: Independent Assessment and Research Centre (Preface by K.M. Miller). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0 9504493 1 8
 3. Cattell, R. B. (1948). Concepts and methods in the measurement of group syntality. Psychological Review, 55(1), 48–63. doi: 10.1037/h0055921
 4. Cattell, R. B. (1987). Psychotherapy by Structured Learning Theory. New York: Springer.
 5. Cattell, R. B., & Butcher, H. J. (1968). The Prediction of Achievement and Creativity. Indianapolis: Bobbs-Merrill.
 6. Cattell, R. B. (1966). (Ed.), Handbook of Multivariate Experimental Psychology. Chicago, IL: Rand McNally.
 7. Cattell, R. B. & Kline, P. (1977). The Scientific Analysis of Personality and Motivation. New York: Academic.
 8. 8.0 8.1 Cattell, R. B. (1973). Personality and Mood by Questionnaire. San Francisco: CA: Jossey-Bass.
 9. Cattell, R. B., Eber, H. W., & Tatsuoka, M. M. (1970). Handbook for the Sixteen Personality Factor Questionnaire (16PF). New York: Plenum.
 10. Cattell, R. B. (1982). The Inheritance of Personality and Ability: Research Methods and Findings. New York: Academic.
 11. Cattell, R. B. & Child, D. (1975). Motivation and Dynamic Structure. London: Holt, Rinehart & Winston.
 12. Schuerger, J. M. (1995). Career assessment and the Sixteen Personality Factor Questionnaire. Journal of Career Assessment, 3(2), 157–175.
 13. Cattell, R. B. (1963). Theory of fluid and crystallized intelligence: A critical experiment. Journal of Educational Psychology, 54, 1–22.
 14. Cattell, R. B. & Cattell, A. K. S. (1973). Measuring Intelligence with the Culture Fair Tests. Champaign, IL: IPAT.
 15. Cattell, R. B. (1984). The voyage of a laboratory, 1928–1984. Multivariate Experimental Research, 19, 121–174.
 16. Cattell, R. B. (1943). The description of personality: I. Foundations of trait measurement. Psychological Review, 50, 559–594.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேமண்ட்_கேட்டல்&oldid=3399143" இலிருந்து மீள்விக்கப்பட்டது