ரேன்கின் அலகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரேங்கின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரேன்கின்
வெப்பநிலை அலகு மாற்றீடு
ரேன்கின்
இலிருந்து
ரேன்கின்
இற்கு
செல்சியசு [°C] = ([°R] − 491.67) × 59 [°R] = ([°C] + 273.15) × 95
பாரன்ஃகைட் [°F] = [°R] − 459.67 [°R] = [°F] + 459.67
கெல்வின் [K] = [°R] × 59 [°R] = [K] × 95
குறிப்பிட்ட வெப்பநிலைகளுக்கு அல்லாது
வெப்பநிலை மாற்றங்களுக்கு,
1°R = 1°F = 59°C = 59 K

வெப்பவியக்கவியலில் ரேன்கின் (Rankine) என்பது தனி வெப்பநிலையை அளக்கும் ஓர் அலகு ஆகும். கிளாஸ்கோ பல்கலைக்கழக இயற்பியலாளர் வில்லியம் ரேன்கின் நினைவாக இவ்வலகிற்கு அவரது சூட்டப்பட்டது. 1859 ஆம் ஆண்டில் இவர் இவ்வலகைப் பரிந்துரைத்தார். கெல்வின் அலகு 1848 இல் முதன் முறையாகப் பரிந்துரைக்கப்பட்டது.

ரேன்கின் பாகைகள் °R (அல்லது °Ra) இனால் குறிக்கப்படுகிறது.[1][2] கெல்வின், ரேன்கின் அலகுகளின் சுழியம் தனிச்சுழி வெப்பநிலை ஆகும். ஆனால் வெப்பநிலை இடைவெளிகளில் ஒரு ரேன்கின் பாகை ஒரு பாரன்ஃகைட் பாகைக்கு சமனாகும். இடைவெளி 1°R = இடைவெளி 1 °F. அதே வேளையில், வெப்பநிலை இடைவெளிகளில் ஒரு கெல்வின் பாகை ஒரு செல்சியசு பாகைக்கு சமனாகும். −459.67 °ப வெப்பநிலை 0 °R இற்கு சமனாகும்.

சில குறிப்பிட்ட வெப்பநிலைகள் கீழே ஒப்பிடப்பட்டுள்ளன:

கெல்வின் செல்சியசு பாரன்கைட்டு ரேன்கின்
தனிச்சுழி வெப்பநிலை
(வரைவிலக்கணப்படி)
0 K −273.15 °C −459.67 °F 0 °R
நீரின் உறைநிலை[3] 273.15 K 0 °C 32 °F 491.67 °R
நீரின் மும்மைப் புள்ளி
(வரைவிலக்கணப்படி)
273.16 K 0.01 °C 32.018 °F 491.688 °R
நீரின் கொதிநிலை 373.1339 K 99.9839 °C 211.97102 °F 671.64102 °R

வெப்பநிலை அலகுகளுக்கிடையேயான தொடர்பு அட்டவணை[தொகு]

கெல்வின்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேன்கின்_அலகு&oldid=3871319" இலிருந்து மீள்விக்கப்பட்டது