ரெய்க் வேந்தர் மாளிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1938 ஆகஸ்ட்,ஜெர்மனி, ரெய்க் வேந்தர் மாளிகை

ரெய்க் வேந்தர் மாளிகை-(Reich Chancellery)- பழைய ஜெர்மன் வேந்தரின் அரசியல் மாளிகையை ரெய்க் மாளிகை. தற்பொழுது அம்மாளிகை வேந்தர்களின் அலுவலகமாக செயல்படுகிறது. ஜெர்மனி அரசு மாளிகையாகவும் கூறப்படும். 1938 ல் இட்லருக்காக புது வேந்தர் மாளிகை ஆல்பர்ட் ஸ்பீர் என்பவரால் இட்லரின் வேண்டுகோளுக்கு இணங்க ஓரு வருடத்திற்குள் மாளிகைக் கட்டப்பட்டது. இந்த புது மாளிகையையொட்டித்தான் கீழ் தள ஃபியூரர் பதுங்கு அறை (ஃபியூரர் பங்கர்) கட்டப்பட்டது. பழைய வேந்தர் பிஸ்மார்க் பயன்படுத்திய மாளிகை சோப்பு கம்பெனி வைக்கத்தான் பயன்படும் என்றுகூறிய இட்லர் நான்கு வருடத்திற்கு முன்னரே இதை நிர்மானிக்கத் திட்டம் தீட்டி அதன்படி கட்டப்பட்டது. இதன் கட்டுமானத்தொகை 9 கோடி ரெய்க் மாரக் என தீர்மானித்து 4000 பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டு திட்டமிட்ட காலத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னரே கட்டிமுடிக்கப்பட்டது. இதன் வரவேற்பறை, மற்றும் நண்பர்கள் தங்கும் அறை மக்களை சந்திக்கும் வெளிக்கூடம் போன்றவை நவீனமாக இட்லர் விருப்பப்படி அமைக்கப்பட்டது.