ரூபெல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரூபெல்ல்லா என்பது ரூபெல்லா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று ஆகும்.இதனை ஜெர்மன் தட்டம்மை அல்லது மூன்று நாள் தட்டம்மை என்றும் கூறுவர். இந்த வைரஸ் சுவாசப் பாதை வழியாக உள் நுழைகிறது. தொற்று ஏற்பட்டு 5-7 நாட்கள் இரத்தத்தில் இருந்து பின் உடல் முழுதும் பரவுகிறது.இவை தொப்புல் கொடி வழியாக கருவை சென்றடையக் கூடியவை.

அறிகுறிகள்[தொகு]

ஆரம்பத்தில் இந்நோய் பெரும்பாலும் தாக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு வராத வண்ணம் உள்ளது. பின்னர் தடித்தல் தோன்றி முகத்தில் இருந்து உடல் முழுதும் பரவுகிறது. சிலநேரங்களில் தடிப்புகளில் அரிப்பு ஏற்படுகிறது. காய்ச்சல், வரண்ட தொண்டை, மயக்கம் , மூட்டு வலி போன்றவையும் ஏற்படுகின்றன . கற்ப காலத்தில் இத்தொற்று ஏற்படும் போது கரு கலையவோ அல்லது பிறக்கும் குழந்தைகள் பிறவி ரூபெல்லா நோய்க்குறியோடு (congenital rubella syndrome) பிறக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு இதனால் கண்புரை, காது கேளாமை, மூளை மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

சிகிச்சை[தொகு]

ரூபெல்லாவிற்கு என்று தனிப்பட்ட சிகிச்சை இல்லை. இருப்பினும் இத்தொற்றை வராமல் தடுப்பதற்கு எம்.எம்.ஆர் தடுப்பூசிகள் ( MMR vaccine) பயன்படுத்தப்படுகின்றன. உலகச் சுகாதார நிறுவனம் குழந்தையின் 12-18 மாதத்திற்குள் முதல் ஊசியும் 36 மாதத்தில் இரண்டாவது உளசியும் போட பரிந்துைரை செய்கிறது. உலகச் சுகாதார நிறுவனம் அக்டோபர் 2018ல் ரூபெல்லா இல்லாத நாடாக ஆஸ்திரேலியாவை அறிவித்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபெல்லா&oldid=2634324" இருந்து மீள்விக்கப்பட்டது