ருரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ருரு என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் ஒரு அரக்கராவார்.[1] இவர் ஒரு முறை சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவியை கண்டு அவரை அடைய வேண்டும் என எண்ணினார். அதற்காக கடுமையான தவத்தில் ஈடுபட்டார். பிரம்மா அவர்முன் தோன்றி என்ன வரம்வேண்டுமென கேட்க பார்வதியை மணக்க வேண்டும் என்றார். அது தன்னால் கொடுக்கமுடியாத வரமென மறைந்தார். ருரு தவத்தினைத் தொடர்ந்தார், இதையறிந்த பார்வதி தேவி யானையுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒரு சிங்கத்தினை கொன்று யானையைக் காப்பாற்றினார். அச்சிங்கத்தின் தோலை உடலில் போட்டுக் கொண்டு தவமிருக்கும் ருருவின் முன்வந்தார்.

பார்வதியின் அகோர ரூபத்தினைக் கண்ட ருரு பயந்தான். பார்வதி என்பவள் அழகானவள், அவளையே மணம் முடிக்க எண்ணினேன். உன்னையல்ல என்று கூறினான். அத்துடன் பார்வதி அங்கிருந்து விரட்டுவதற்கு கதையாயுத்தால் தாக்க முற்பட்டான். பார்வதி தேவி அவனை கொன்றாள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "வராக புராணம் பகுதி-1".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருரு&oldid=2097634" இலிருந்து மீள்விக்கப்பட்டது