ரியூக்கியூவ மொழிகள்
Jump to navigation
Jump to search
ரியூக்கியூவ மொழிகள் (Ryukyuan languages) என்பன, சப்பானியத் தீவுக்கூட்டத்தின் தென் கோடியில் அமைந்துள்ள ரியூக்கியூத் தீவுகளின் தாயக மக்கள் பேசும் மொழிகள் ஆகும். சப்பானிய மொழியுடன் சேர்ந்து இவை சப்போனிக் மொழிக் குடும்பத்தை உருவாக்குகின்றன. இம்மொழிகள் ஒன்றையொன்று புரிந்துகொள்ளக் கூடியவை அல்ல. இன்று இம்மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தெரியாது. ஆனால், இம்மொழியை பேசும் மக்கள் ஒக்கினாவா சப்பானிய மொழியைப் போன்ற சப்பானிய மொழிகளுக்கு மாறிவருவதால், இம்மொழிகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இம்மொழிகளுள் நான்கு நிச்சயமான அருகும் நிலையில் உள்ளவை என்றும் மேலும் இரண்டு ஆபத்தான அருகும் நிலையில் உள்ளவை என்றும் யுனெசுக்கோ அறிவித்துள்ளது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "UNESCO Atlas of the World's Languages in danger". Unesco.org. 2014-03-16 அன்று பார்க்கப்பட்டது.