ரிம்மா சூபினா
ரிம்மா சூபினா | |
---|---|
Римма Анатоліївна Зюбіна | |
தாய்மொழியில் பெயர் | Римма Анатоліївна Зюбіна |
பிறப்பு | ஆகத்து 23, 1971 உசரோத் நகரம் |
ரிம்மா அனடோலியெவ்னா சூபினா (Rimma Anatolyevna Zyubina, உக்ரேனியம்: Rimma Anatolyivna Zyubina; பிறப்பு 23, ஆகத்து, 1971, உஷோரோட்) என்பவர் ஒரு உக்ரேனிய நாடக மற்றும் திரைப்பட நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். "ஷாட் இன் உக்ரைனின்" மதிப்பீட்டில் 2017-2019 ஆம் ஆண்டில் சிறந்த நடிகையாக அங்கீகரிக்கப்பட்டவர். இரண்டு முறை கீவ் பெக்டோரல் பரிசைப் பெற்றவர். மேலும் பல சர்வதேச விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
வாழ்கை வரலாறு
[தொகு]ரிம்மா சியுபினா உக்ரைன் நாட்டின் சாகர்பாசியா மாகாணத்தில் உசரோத் நகரில் பிறந்தார். இவரது தந்தை ஒரு இராணுவ வீரர் என்பதால் இவர் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை அங்கேரியில் வாழ்ந்தார். அங்கேரியில் இவரது அக்காள் முக்கிய வேடத்தில் நடித்த "சிண்ட்ரெல்லா" நாடகத்தைப் பார்த்தபோது, தான் இவருக்கு அந்த குழந்தைப் பருவத்தில் ஒரு நடிகையாக வேண்டும் என்ற கனவு உருவானது. குழந்தை பருவத்திலிருந்தே, இவர் பாலே பயின்றார், இசைப் பள்ளியில் பயின்றார், மேலும் டிரான்ஸ்கார்பதியன் நாடக அரங்கில் உள்ள ஸ்டுடியோ தியேட்டரான "ரோவ்ஸ்னிக்" என்ற குழந்தைகளின் நாடகக் குழுவில் கலந்து கொண்டார். அங்கு இவர் 17 வயதிலிருந்தே கூட்டக் காட்சிகளில் நடித்தார். இவர் உஸ்ஹோரோட் கலாச்சார மற்றும் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றார். அதன் பிறகு இவருக்கு பல நாடக அங்குகளில் பணியாற்ற அழைப்பு வந்தது. ஆனால் இவர் கியேவ் தேசிய கலாச்சாரம் மற்றும் கலை பல்கலைக்கழகத்தில் பயில முடிவு செய்தார். ஒரு ஆண்டு படிப்புக்குப் பிறகு, இவர் உஷோரோட்டுக்குத் திரும்பி உள்ளூர் நாடக அரங்கில் வேலை பெறுகிறார்.
தொழில்
[தொகு]சில காலம் கழித்து, இவர் மீண்டும் கியேவுக்குச் சென்றார். அங்கு இவர் சேம்பர் பிளேயின் தொழில்முறை நாடக அரங்க-ஸ்டுடியோ, யூத் நாகர அரங்கம், டினீப்பரின் இடது கரையில் உள்ள நாடகம் மற்றும் நகைச்சுவை நாடக அரங்கம், கோல்டன் கேட் நாடக அரங்கம் மற்றும் கான்ஸ்டலேஷன் நாடக அரங்கம் என ஒரே நேரத்தில் பல நாடக அரங்குகளில் பணியாற்றினார். 1992 ஆம் ஆண்டில், மேட் லவ் என்னும் படத்தின் வழியாக ஒரு குறிசுடுநர் மற்றும் ஒரு விண்வெளி வீரராக இவர் தொலைக்காட்சியில் அறிமுகமானார். 1992 முதல் இவர் எனிகி-பெனிகி நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும், 1994 முதல் உக்ரைனின் முதல் தேசிய தொலைக்காட்சி அலைவரிசையில் குழந்தைகள் பதிப்பில் லெகோ எக்ஸ்பிரஸ் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
1994 இல் இவர் கியேவ் பண்பாட்டு கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றார். கோர்னிச்சுக் (இப்போது அது கியேவ் தேசிய பண்பாடு மற்றும் கலை பல்கலைக்கழகம்), அதே நேரத்தில் அவர் பிராவோ நடாக அரங்கிலும் பணியாற்றத் தொடங்கினார். 1997 முதல்-கீவ் அகாதமிக் யங் நாடகக் குழுவின் உறுப்பினராக இருந்தார். நாடக அரங்கில் பணிபுரிந்த பல ஆண்டுகளில், இவர் சர்வதேச நாடக விழாக்களில் பலமுறை கலந்துகொண்டு நிகழ்த்தியுள்ளார்.
2016 ஆம் ஆண்டில், இவர் "தி டோவ்' ஸ் நெஸ்ட் " படத்தில் நடித்தார். படம் "கோல்ட் ஜிகா" என்ற வெற்றி விருதைப் பெற்றது. அங்கு ஆறு சிலைகளைப் பெற்றது, இதில் ரிம்மா ஜூபினா "சிறந்த நடிகை" என்ற பட்டத்தைப் பெற்றார். 2017 ஆம் ஆண்டில், இவர் உக்ரைனில் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் உக்ரேனிய நாடக இயக்குநர் ஸ்டானிஸ்லாவ் மொய்சீவை மணந்தார், 1998 இல் இந்த இணையருக்கு ஒரு மகன் பிறந்தான்.
பொது வாழ்க்கை
[தொகு]இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்கான நண்டு அறக்கட்டளையின் தூதராக உள்ளார்.
இந்த நடிகை "உக்ரைனின் மரியாதைக்குரிய கலைஞர்" என்ற பட்டத்தை மீண்டும் மீண்டும் ஏற்க மறுத்தார். ஏனெனில், இவரது கருத்துப்படி, இது கடந்த சோவியத் காலத்தின் நினைவுச்சின்னம் என்றார். மேலும் இவர் நாட்டில் தற்போதைய நாடக அமைப்பின் சீர்திருத்தத்தை தீவிரமாக ஆதரிக்கிறார்.
2014 மார்ச்சில், கிரிமியாவை உருசியா தன்னோடு இணைத்துக் கொண்ட பின்னர், உருசிய தயாரிப்புப் படங்களில் நடிப்பதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் உக்ரேனிய நடிகை ரிம்மா சூயுபினா ஆவார். உக்ரேனிய திரைப்பட இயக்குநர் ஒலெக் சென்ட்சோவை உருசிய சிறையில் இருந்து விடுவிக்க இவர் தீவிரமாக போராடினார். " மரங்களை நடுங்கள், மக்களை அல்ல" என்ற பரப்புரையை ஏற்பாடு செய்தனர், இது உலகின் பல நாடுகளில் ஆதரிக்கப்பட்டது. சட்டவிரோதமாக தண்டிக்கப்பட்டு உருசிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள உக்ரேனிய அரசியல் கைதிகளுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளில் இவர் வழக்கமாக கலந்து கொண்டு வருகிறார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dorotyuk, Alina. "There are no brains, they are washed: rimma zyubina about ukrainian actors in russia who are silent about the war". globalhappenings.com.