ரிக்கார்டோ பீஸா ரோட்ரிக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரிக்கார்டோ பீஸா ரோட்ரிக்ஸ்(Ricardo Baeza Rodríguez)என்பார் சிலி நாட்டு கணிதவியலாளர் ஆவார். இவர் டால்கா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார்.[1][2] .இவர் தனது முனைவர் பட்டத்தை 1970 ஆம் ஆண்டில் சார்லாண்ட் பல்கலைக்கழகத்தின் ராபர்ட் டபிள்யூ.பெர்ஜர், மேன்பிரட் கினிபுஷ் ஆகியோரின் மேற்பார்வையில் பெற்றார்.இவரது ஆராய்ச்சியின் அதிக ஆர்வம் எண் கோட்பாட்டில் உள்ளது. பீஸா 1983 இல் சிலியின் அறிவியல் அகாடமியில் உறுப்பினரானார்.[2][3][4] இவர் 2009 ஆம் ஆண்டு துல்லியமான அறிவியலுக்கான சிலியின் தேசிய பரிசை வென்றார் .[1] இவர் 2012 ஆம் ஆண்டில் இவர் அமெரிக்கன் கணிதவியல் சங்கத்தின் தொடக்கத்தில் உள்ள சக உறுப்பினர்களில் ஒருவராவார். சிலி நாட்டைச் சேர்ந்தவர்களில் இவர் மட்டுமே மேற்கண்டவாறு கௌரவிக்கப்பட்டார்.[2][4] .[2][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Member profile, Chilean Academy of Sciences, retrieved 2015-01-12.
  2. 2.0 2.1 2.2 2.3 "Miembro de Excelencia: Ricardo Baeza será distinguido por la American Mathematical Society", Sala de Prensa, University of Talca, November 16, 2012, பார்க்கப்பட்ட நாள் 2015-01-12.
  3. கணித மரபியல் திட்டத்தில் ரிக்கார்டோ பீஸா ரோட்ரிக்ஸ்.
  4. 4.0 4.1 "Ricardo Baeza gana Premio Nacional de Ciencias Exactas", Nacion.cl, August 27, 2009.
  5. List of Fellows of the American Mathematical Society, retrieved 2015-01-12.