ராஷ்மி நர்சரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஷ்மி நர்சரி போடோ வம்சாவளியைச் சேர்ந்த ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளராவார். இவரது, குழந்தைகளுக்கான புத்தகமான ஹிஸ் ஷேர் ஆஃப் ஸ்கை (2012) மிகவும் பிரபலமான இவர் 2016 இல் சாகித்ய அகாடமி விருதை வென்றார்.[1]

இவரது முதல் நாவலான பிளட்ஸ்டோன், லெஜண்ட் ஆஃப் தி லாஸ்ட் என்கிராவிங், இலக்கியரீதியாகவும், சமூக ரீதியாகவும் மற்றும் கல்வி ரீதியாகவும் பாராட்டப்பட்ட பாலின ஆய்வுகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை ஊக்குவிக்கும் சிறந்த படைப்பாகும்.

  • மொசைக்,
  • கலர்ஸ் ஆஃப் லைஃப்,
  • மனித உறவுகள் மற்றும் உணர்ச்சிகள் பற்றிய சிறுகதைகளின் தொகுப்பு
  • லுக்கிங் பியோண்ட், மற்றும்
  • சிநேகலாயா ஹவுஸ் ஆஃப் லவ் குழந்தைகளின் நம்பிக்கை மற்றும் வாழ்க்கை அனுபவங்களின் கதைகள்

போன்றவை இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.

மறைந்த டாக்டர். பாபேந்திர நாத் சைகியாவின் விருது பெற்ற அசாமிய கதைகள் இவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

ஷில்லாங்கில் உள்ள பைன் மவுண்ட் பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கிய நர்சரி தற்போது பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ள அப்போதைய காட்டன் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், சிம்பயோசிஸில் இருந்து மனித வள மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

ராஷ்மி நர்சரியின் சில படைப்புகள் பிற இந்திய மொழிகளில் மட்டுமல்லாது வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பல்கலைக்கழகங்களில் பாடங்களாகவும் கற்பிக்கப்பட்டு வருகிறது.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் அஸ்ஸாமின் கவுகாத்தியில் வசித்து வருகிறார். இவரின் கணவர் ஹேமந்த நர்சாரி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புக் கண்காணிப்பாளராக உள்ளார். இவருக்கு டாக்டர் சந்தியா நர்சரி என்ற மகளும் ஜெய்ராஜ் நர்சரி என்ற மகனும் உள்ளனர்.

விருதுகள்[தொகு]

  • குழந்தை இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி, 2016
  • ப்ராக் பிரேரோனா இலக்கியத்திற்கான விருது, 2020

மேற்கோள்கள்[தொகு]

  1. "BAL SAHITYA PURASKAR (2010-2020)". SAHITYA AKADEMI. பார்க்கப்பட்ட நாள் 4 January 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஷ்மி_நர்சரி&oldid=3681278" இலிருந்து மீள்விக்கப்பட்டது