ராவூரி பரத்வாஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராவூரி பரத்வாஜ்

ராவூரி பரத்வாஜ் (பிறப்பு:1927) ஓர் தெலுங்கு மொழிக் கவிஞர். இவர் கவிதை, கட்டுரை, புதினம் எனப் பல வகையிலும் எழுத்துத் துறையில் பணியாற்றியவர். இவர் இதுவரை 37 சிறுகதைத் தொகுப்புகளையும், பதினேழு புதினங்களையும், ஐந்து வானொலி நிகழ்ச்சிகளையும் எழுதியுள்ளார். இவரது ஆக்கமான பாக்குடு ரால்லு என்ற நூலுக்காக, 48வது ஞானபீட விருது (2012 ஆம் ஆண்டுக்கானது) ஏப்பிரல் 17, 2013 அன்று அறிவிக்கப்பட்டது. இவருக்கு ஆந்திரப் பல்கலைக்கழகம், நாகார்ஜுனா பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவை கௌரவ முனைவர் பட்டங்கள் வழங்கின.[1] லோக் நாயக் நிறுவல் விருது 2009 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. இவரையும் சேர்த்து இதுவரை மூன்று தெலுங்கு மொழிக் கவிஞர்கள் ஞானபீட விருதுகளைப் பெற்றுள்ளனர்.

ஆக்கங்கள்[தொகு]

 • பாக்குடு ரள்ளு
 • ஜீவன சமரம்
 • தெலுசுகுன்டூ... தெலுசுகுன்டூ...
 • லோகம் கோசம்
 • இதி நாடி காடு
 • ஆகள்ளு

விருதுகள்[தொகு]

 • ராஜலட்சுமி அறக்கட்டளை விருது (1987)
 • தெலுங்கு கலாசமிதி கே.வி. ராவ், ஜோதிராவ் விருது (1987)
 • ஆந்திரப் பிரதேச கலாரத்னா விருது (2007)
 • லோக் நாயக் அறக்கட்டளை விருது (2008)
 • ஞானபீட விருது (2013)

சான்றுகள்[தொகு]

 1. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/ravuri-gets-jnanpith-award/article4627060.ece

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராவூரி_பரத்வாஜ்&oldid=3268558" இருந்து மீள்விக்கப்பட்டது