ராய் இசை
Appearance
ராய் இசை (Raï) அல்ஜீரியாவின் ஒரான் பிரதேசத்திலிருந்து தோன்றிய பாரம்பரிய இசை வடிவமாகும். ராய் என்ற அரபுச் சொல் கருத்து என்று பொருள்படுவதாகும். ஸ்பானிய, பிரெஞ்சு, ஆபிரிக்க, அரேபிய இசை வடிவங்களும் கலந்த இவ்விசை வடிவம் 1930களில் தோன்றியதாகும். பாரம்பரியமாக ஆண்களால் பாடப்பட்டபோதும் இருபதாம் நூற்றாண்டிலிருந்து பெண்களாலும் பாடப்படுகிறது. 1980களில் ராய் மிகுந்த பிரபலமடைந்தது. 1986 இல் அல்ஜீரியாவிலும் பிரான்சிலும் ராய் விழாக்கள் நடைபெற்றன. 1990களில் ராய் சர்வதேச அளவில் பிரபலமடைந்தது.