உள்ளடக்கத்துக்குச் செல்

ராமாயணத்தை தடை செய் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராமாயணத்தை தடை செய் என்ற நூல் எம். ஆர். ராதாவால் எழுதப்பட்டது. இது டிசம்பர், 1954ம் ஆண்டு ராணி பதிப்பகம் வெளியிட்டது. இதன் இரண்டாம் பதிப்பை சிந்தனை பதிப்பகம் டிசம்பர், 1996ம் ஆண்டு வெளியிட்டது. அதன் பின்பு 5 பதிப்புகள் வெளியாகியிருக்கின்றது.

முன்னுரையில் எம்.ஆர். ராதா

[தொகு]

சிறையிலே எழுந்த சிந்தனையல்ல இச்சிறு நூல். வழங்கிய உரிமைகளைப் பறிக்கும் போது எழுந்த வயிற்றெரிச்சல், எண்ண. எழுத, பேச, எடுத்து செல்ல, உரிமை அளித்திருக்கிற அரசாங்கத்தில், ராமாயண நாடகத்திற்கு 144 தடை! ஒரு சிலர் மனம் புண்படுகிறதாம்! கடவுளாக கருதிவந்த ராமனை இழிவுபடுட்டுதகிறேனாம். தாயான சீதையை தரக்குறைவாக பேசுகிறேனாம். இப்படியெல்லாம் காரணம் காட்டுகிறார்கள் தடை செய்தவர்கள். சட்டத்தைக் காட்டினாலும், தடை செய்தாலும் சிறையிலடைத்தாலும், உண்மையை மக்கள் உணரத்தான் போகிறார்கள். உள்ளத்தில் ஊறிய கருத்தை சட்டம் அழித்துவிட்டதாக சரித்திரமே கிடையாது. உண்மை ஊழல்களாக இருக்கும் போது, புரட்டுகள் எல்லாம் புனிதமாக்கப்பட்டிருக்கும் போது, ஆபாசங்கள் ஆண்டவன் லீலையாகியிருக்கும் போது, இருப்பதை எடுத்து செல்வது தவறா? நடித்துக்காட்டுவதுதான் தவறா? தீர்ப்பு கூறட்டும் திராவிட பெருங்குடி மக்கள்.