ராதா ரீஜண்ட் ஹோட்டல், சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராதா ரீஜென்ட் சென்னை, இதற்கு முன்பு பார்க் இன் என்று அழைக்கப்பட்டுவந்த நான்கு நட்சத்திர மதிப்பு கொண்ட ஒரு ஹோட்டலாகும். இது இந்தியாவின் சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில், சரோவர் ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட்ஸின்[1] இரண்டாவது ஹோட்டல் இதுவாகும். சென்னையில் இன்னர் ரிங்க் சாலையில் முதன் முதலாகத் தொடங்கப்பட்ட நட்சத்திர ஹோட்டல் இதுவாகும். சென்னையின் முதன்முதலாக ஜியோஃப்ரேய்ஸ் எனும் பொதுவிடுதியினை 2001 ஆம் ஆண்டில் திறந்ததும் ராதா ரீஜென்ட் ஹோட்டலாகும்.

இருப்பிடம்[தொகு]

171 ஜவஹர்லால் நேரு சாலை, இன்னர் ரிங்க் சாலை, அரும்பாக்கத்தில் ராதா ரீஜென்ட் ஹோட்டல் அமைந்துள்ளது. ராதா ரீஜென்ட் ஹோட்டலில் இருந்து, வாழ்க்கையை மாற்றக்கூடிய தேவாலயம் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலும், 125 ஆண்டுகள் பழமைவாய்ந்த வடபழனி முருகன் கோவில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் இந்த இடங்கள் மட்டுமல்லாது, இதனருகில் அமைந்து பிற சுற்றுலாத்தலங்களையும் காண வேண்டியது அவசியம். ஹோட்டலில் இருந்து அனந்த பத்மநாப சுவாமி கோவில் (1962 இல் கட்டப்பட்டது), வண்டலூர் விலங்கியல் பூங்கா மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அர்மெனியன் தேவாலயம் ஆகியவை காண்பதற்குரிய சுற்றுலாத் தலங்களாகும்.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

ராதா ரீஜென்ட் ஹோட்டலுக்கு அருகே அமைந்திருக்கும் போக்குவரத்து வசதிகள் பின்வருமாறு: சென்னை சர்வதேச விமான நிலையம் – 14 கிலோ மீட்டர் (தோராயமாக) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் – 11 கிலோ மீட்டர் (தோராயமாக)

ஹோட்டல் விவரங்கள்[தொகு]

1997 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த ஹோட்டல் 91 அறைகளைக் கொண்டிருந்தது. அதில் 62 சுப்பீரியர் அறைகளும், 23 எக்ஸ்கியூட்டிவ் அறைகளும், 6 சூட்களும் அடங்கும். ஹோட்டலில் அமைந்துள்ள உணவகங்களில்[2] முக்கிய வராந்தாவில் அமைந்துள்ள காஃபி கடை, பல்வகை உணவு விடுதி மற்றும் 2004 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட ஓரியண்டல் வகைகளின் உணவகம்,ஜியோஃப்ரேய்ஸ் பொது விடுதி மற்றும் 2004 ஆண்டில் தொடங்கப்பட்ட பார், கூட்ட அரங்குகள் ஆகியவை அடங்கும். இந்த ஹோட்டலில் மொத்தம் ஆறு கூட்ட அரங்குகள் உள்ளன. அவற்றின் மொத்த பரப்பளவு 6,500 சதுர அடிகள் ஆகும். 2013 ஆம் ஆண்டில் ஹோட்டலின்[3] 20,000 சதுர அடிகள் பரப்பளவு கொண்ட தோட்ட விருந்து புல்வெளியில், ஒரே நேரத்தில் 3000 விருந்தினர்களுக்கு இடமளிக்க முடியும். சுமார் 150 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு இடவசதிகள் வாகன நிறுத்துமிடத்தில் உள்ளன. ஹோட்டல் கட்டிடத்தின் மொத்த உயரம் சுமார் 50 அடி (15 மீட்டர்) ஆகும். ஜே ரமணன் என்பவரால் 1997 ஆம் ஆண்டு ஹோட்டலின் உட்புற வடிவமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. 2004 ஆம் ஆண்டில் கிழக்கத்திய பிளாசம் வகையிலான வடிவமைப்பினை மும்பையினை அடிப்படையாகக் கொண்ட பிரகாஷ் மங்கர் மற்றும் அசோசியேட்ஸ் குழு செய்தனர். ராதா ரீஜென்ட் ஹோட்டல்கள் பெங்களூரில் இரு, மூன்று நட்சத்திர ஹோட்டல்களைத் திறந்துள்ளனர். அவை: ராதா ஹோம்டெல் (வைட்ஃபீல்ட், பெங்களூர் 2005) மற்றும் ராதா ரீஜென்ட் ஹோட்டல் (பெங்களூர், எலெக்ட்ரானிக் நகரம், 2008). முதலில் கூறப்பட்ட ஹோம்டெல் ரக ஹோட்டல் சரோவர் ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட்ஸின் முதல் ஹோம்டெல் ஹோட்டலாகும்.

விருதுகள்[தொகு]

2004 ஆம் ஆண்டின் சரோவர் பார்க்[4] பிளாசா சிறந்த ஹோட்டலுக்கான விருதினை சரோவர் ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட்ஸ் குழுமம் வழங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Resorts & Pub". indiatoday.intoday.in. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  2. "restaurant". thehindu.com. 12 July 2004. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  3. "Radha Regent Hotel Services". cleartrip.com. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  4. "Just the place to chill out". thehindu.com. 8 August 2002. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.