ராட்வைலர் அல்லது ராட்வீலர் அல்லது ரொட்வீலர் என்பது செர்மனியின் ராட்வைல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட ஒரு வீட்டு நாய் இனம். இது நடுத்தர அளவிலிருந்து பெரிய உருவம் கொண்டது.[1][2] இது மாடு மேய்க்கும் நாய்களாகப் பயன்பட்டு வந்தது. தற்காலத்தில் தேடுதல் காப்பாற்றுதல், விழியிழந்தோருக்கும் வழிகாட்டுதல் முதலிய பணிகளில் மனிதர்களுக்கு உதவுகின்றன.[3]