ராகேஷ் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராகேஷ் ஷர்மா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராகேஷ் ஷர்மா
Rakesh sharma.jpg
Intercosmos Cosmonaut
தேசியம்  இந்தியா
நிலை வாழ்கிறார்
வேறு பணிகள்
சோதனை வானோடி
தரம் Squadron Leader (retired Wing Commander), இந்திய வான்படை
விண்வெளி நேரம்
7நாள் 21மணி 40நிமிடம்
தெரிவு 1982
பயணங்கள் Soyuz T-11
திட்டச் சின்னம்
Soyuz T-11 mission patch.gif

ராகேஷ் ஷர்மா (பிறப்பு:1949 ஜனவரி 13, பாட்டியாலா,இந்தியா) விண்வெளியில் பறந்த முதல் இந்தியராவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் பிறந்தவர். ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 138-வது மனிதராவார். இவர் விண்வெளியில் 8 நாட்கள் தங்கியிருந்தார்.

கல்வி[தொகு]

பிறந்தது பஞ்சாப் என்றாலும் தனது பள்ளிப் படிப்பை ஐதராபாத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் முடித்தார். அதன்பின்னர் 1966-இல் அவர் தேசிய இராணுவப் பள்ளியில் விமானப் படைப் பிரிவில் மாணவராக சேர்ந்து, படிப்பை முடித்தார்.

விமானப்படை வீராக[தொகு]

இவர் 1970இல் இந்திய விமானப் படையில் பயிற்சி விமானியாக பணியாற்றினார். 1984ஆம் ஆண்டில் விமானப் படைப்பிரிவின் ஒரு குழுவுக்கு ராகேஷ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

விண்வெளி வீரராக[தொகு]

நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்வெளிப் பயணத்திற்கு விண்ணப்பத்தில் ராகேஷ் 1982ஆம் ஆண்டு செப்தம்பர் 20 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று அவர் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். அவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 விண்கலத்தில் பயணம் மேற்கொண்டனர். சல்யூட் 7 என்ற விண்வெளி மையத்தில் அவர் தங்கி இருந்தார். அங்கே பல அறிவியல் ஆய்வுகளை இந்தக் குழு மேற்கொண்டது.

விருதுகள்[தொகு]

ராகேஷ் சர்மாவுக்கு அவரது பணிகளை பாராட்டி அசோகா சக்ரா விருது கிடைத்தது. சோவியத் ரஷ்யாவின் நாயகன் என்னும் விருதையும் பெற்றார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. தி இந்து தமிழ், வெற்றிக் கொடி இணைப்பு,13.1.2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகேஷ்_சர்மா&oldid=2505778" இருந்து மீள்விக்கப்பட்டது