ரனிகொட் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரனிகொட் கோட்டை (Ranikot Fort) என்பது பாக்கித்தானின் சிந்துப் பிரதேசத்தில் ஜம்சாரோ மாவட்டத்தில் சான் பிரதேசத்திற்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டை ஆகும்.[1] இது சிந்துவின் பெரும் சுவர் எனவும் சிறப்பாக அழைக்கப்படுகின்றது. அத்துடன் உலகில் காணப்படும் மிகப்பெரிய கோட்டடைகளில் இதுவும் ஒன்றென வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் சுற்றளவு அண்ணளவாக ருபத்து ஆறு கிலோமீற்றர்கள் ஆகும். இக்கோட்டையானது சீனப் பெருஞ்வ சுருடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றது. 1993 ஆம் ஆண்டில் பாக்கிஸ்தான் நாட்டின் கல்வி அமைச்சினால் உலகப் பாரம்பரியக் களமாக பிரகடனப் படுத்துவதற்காக யுனெஸ்கோ அமைப்பிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டின் சட்ட திட்டங்களிற்கு அமைவாக அப்போதைய அரசாங்கம்ம் இக்கோட்டையை வரலாற்றுத் தளமாக பிரகடனம் செய்து வைத்தது.

அமைவிடம்[தொகு]

இக்கோட்டையானது ஐதரபாத்தின் வட தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 90 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. அத்துடன் கராச்சியில் இருந்து சன் பிரத்ஜேசத்திற்கு வருவதற்கு வெறுமனே ஒரு மணித்தியால நேரம் போதுமானது. அத்துடன் இச்சான் நகரத்தில் இருந்து கிளைப் பாதைகளினூடாக 21 கிலோ மீற்றர் தொலைவில் செல்கின்ற போது ரனிகொட் கோட்டையின் கிழக்குத் திசையில் அமைந்துள்ள நுழைவாயிலை அடையலாம்.

வரலாறு[தொகு]

இக்கோட்டை கட்டப்பட்டதற்கான காரணம இன்னமும் கண்டு அறியப்படவில்லை. எனினும் இக்கோட்டையானது சசானியர்கள், சைத்திஒயர்கள், பார்த்தியர்கள் அல்லது கிரேக்கப் பக்றேரியர்களின் ஆட்சிக் காலப்பகுதியிலேயே கட்டப்பட்டன என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும் தொல்பொருள் ஆடய்வாளர்களது முடிவுகளுக்கு அமைவாக இகோட்டை கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டது எனக் கூறப்படுகின்றது. அத்துடன் சிந்துப் பிரதேசத்தில் காணப்படும் தொல்பொருள் ஆய்வாளர்கள் இக்கோட்டை 1812 ஆம் ஆண்டிலே 1.2 மில்லியன் பாக்கிஸ்தானிய ரூபாய் செலவில் தல்பூர்கள் எனபவர்களால் கட்டப்பட்டது எனக் குறிப்பிடுகின்றனர்.[2] சிந்துவின் அமீர்கள் ஆட்சி நடந்த போது பிரித்தானியப் பேரரசு காலனித்துவ செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தது. அந்த வகையில் பாக்கிஸ்தானின் சிந்துப்பிரதேசத்தில் பல யுத்த நடவடிக்கைகளில் பிரித்தானியப் பேரரசு ஈடுபட்டு வந்தது. அக்காலப்பகுதியில் சிந்துவினை அமீர்ஜ்கள் ஆட்சி செய்து வந்தனர். அவர்களின் இறுதிக் கட்ட யுத்தங்களின் போது இக்கோட்டையை பயன்படுத்தியதுடன் அவர்களது தலைநகரமாகவும் இக்கோட்டையும் இதனைச் சூழ்ந்து காணப்பட்ட நகரப் பிரதேசமும் விளங்கின. இகோட்டையின் கிழக்கு நுழைவாயிலில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அய்வானது இக்கோட்டை 18 தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியிலேயே கட்டப்பட்ட எனும் நிரூபணமான முடிவினைத் தந்தது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ranikot Fort Tourism Pakistan Retrieved 14 June 2014
  2. "Ranikot Fort – the Great Wall of Sindh". Islamic Arts and Culture. பார்த்த நாள் 10 January 2016.
  3. "Ranikot Fort (Jamshoro, Sindh): An AMS Radiocarbon Date from Sann (Eastern) Gate : Journal of Asian Civilizations Vol. 32, No. 2" (pdf). harappa.com (December 2009). பார்த்த நாள் 10 December 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரனிகொட்_கோட்டை&oldid=2152936" இருந்து மீள்விக்கப்பட்டது