ரஞ்சன்பென் தனஞ்சய் பட்
ரஞ்சன்பென் தனஞ்சய் பட் (Ranjanben Dhananjay Bhatt)(பிறப்பு 10 ஆகஸ்ட் 1962) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர்.அவர் 16 மற்றும் 17 வது மக்களவையில் உறுப்பினராக இருந்துள்ளார்
தொழில்
[தொகு]பட் வதோதராவின் துணை மேயராக இருந்தார்.[1][2]கடந்த 22 ஆண்டுகளாக "மகளிர் மன்றத்தை" இயக்கி தலைமை தாங்கிய பெருமைக்குரியவர்.[3] 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வதோதரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 16 ஆம் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 16 வது மக்களவையில், பட் நீர்வள அமைச்சகத்தின் கீழான நதி மேம்பாடு மற்றும் கங்கா புத்துணர்ச்சி ஆலோசனைக்குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.[3] 2014 முதல் 2016 வரை, இவர் உடல்நலம் மற்றும் குடும்ப நலத்துக்கான நிலைக்குழுவிலும் உறுப்பினராக இருந்தார் . [3][4] 2016 முதல் 2019 வரை, அவர் தொழில்துறை நிலைக்குழுவில் உறுப்பினராக இருந்தார்.[3] 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பட் மீண்டும் வதோதரா தொகுதியிலிருந்து 17 ஆம் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறை இவர் இரயில்வே நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Gujarat bypolls: BJP wins Vadodara Lok Sabha seat by over 3.29 lakh votes". The Economic Times. 16 September 2014. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/gujarat-bypolls-bjp-wins-vadodara-lok-sabha-seat-by-over-3-29-lakh-votes/articleshow/42611285.cms. பார்த்த நாள்: 17 September 2014.
- ↑ 2.0 2.1 "Ranjanben Bhatt". Government of India. பார்க்கப்பட்ட நாள் 16 October 2015.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2019-04-11.
- ↑ "Ranjanben Bhatt". பார்க்கப்பட்ட நாள் 16 October 2015.