ரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரங்குவை வீசுதல்

ரங்கு (Rungu (weapon) சுவாகிலி, பன்மை மருங்கு ) என்பது மரத்தாலான எறிதடி ஆயுதம் ஆகும். இது சில கிழக்கு ஆப்பிரிக்க பழங்குடியினர் பண்பாட்டில் சிறப்பு அடையாளத்தையும் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. இது குறிப்பாக மாசாய் மோரன்களுடன் (ஆண் போர்வீரர்கள்) தொடர்புடையது. அவர்கள் பாரம்பரியமாக இதை போரிலும் வேட்டையிலும் பயன்படுத்துகின்றனர். இது உலகின் அந்தப் பகுதியில் பொதுவாகக் காணப்படும் சுற்றுலா நினைவுச்சின்னமாகும்.

ரங்குகள் பொதுவாக சுமார் 45-50 செமீ (18-20 அங்குலம்) நீளமான, தடியாகவும் அதன் ஒரு முனையில் கனமான குமிழ் அல்லது பந்து போன்ற அமைப்புடன் இருக்கும்.

மாசாய் பண்பாட்டில், ரங்கு என்பது இளம் ஆண்களுக்கு போர்வீரர் அந்தஸ்தின் ஒரு முக்கிய அடையாளமாகும். இவை பெரும்பாலும் எளிமையானதாகவும் கடினமான மரத்தால் செய்யப்பட்டிருக்கும். ஆனால் சடங்கு நோகங்களுக்காக செய்யப்படும் ரங்குகள் வேலைப்பாடுகளுடன் செதுக்கப்படலாம் அல்லது பிற பொருட்களால் செய்யப்பட்டிருக்கலாம். சுற்றுலா வர்த்தகத்திற்காக செய்யப்படும் ரங்குகளின் கைப்பிடிகளில் அலங்கார மணிகளைத் தைக்கும் பணியில் உள்ளூர் பெண்கள் பரவலாக ஈடுபடுகின்றனர்.

கென்யாவின் முன்னாள் சனாதிபதி டேனியல் அராப் மோய், முக்கியமான பொது நிகழ்ச்சிகளில் நேர்த்தியாக தங்கம் அல்லது வெள்ளி பூண் பதிக்கப்பட்ட தந்தத்தாலான ரங்குவை வைத்திருப்பதை எப்போதும் காணமுடிந்தது. அவர் அதை தனது ஃபிம்போ யா நியோ என்று குறிப்பிடுவார் (சுவாஹிலி மொழியில், "நியாயோவின் ஊழியர்- 'நியாயோ' என்பது சனாதிபதி மோயைக் குறிக்கும் ஒரு சொல்") மேலும் அவர் கோபமாக இருக்கும்போது அதைக் கொண்டு மேசையில் குத்துவார். சில சமயங்களில் ரங்குவை உடைப்பார். [1]

குறிப்புகள்[தொகு]

 

  1. "When Biwott invited Moi's wrath". Daily Nation. February 10, 2004. Archived from the original on April 19, 2004.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்கு&oldid=3321335" இலிருந்து மீள்விக்கப்பட்டது