யே சுகுவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யே சுகுவா (Ye Shuhua) (எளிய சீனம்: 叶叔华; பிறப்பு: ஜூன் 21, 1927) ஒரு சீன வானியலாளரும் சாங்கய் வான்காணகப் பேராசிரியரும் ஆவார். இவர் 1960 களில் உலகின் மிகத் துல்லியமான பொது நேரத்தை அளந்ததற்காகவும் மீநீள அடித்தள குறுக்கீட்டுமானியை நிறுவியதற்காகவும் சீனாவில் செயற்கைக் கோள் ஒருங்கொளி நெடுக்க நுட்பங்களை உருவாக்கியதற்காகவும் பெயர்பெற்றவர்.

இவர் முன்பு சாங்காய் வான்காணகத் தலைவராகவும் சீன வானியல் கழகத்தின் துணைத்தலைவராகவும் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் துணைத்தலைவராகவும் இருந்துள்ளார். இவர் சீன அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும் பிரித்தானிய அரசு வானியல் கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினராகவும் இருந்துள்ளார். 3241 யேசுகுவா எனும் சிறுகோள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

இளமை[தொகு]

இவர் சீனாவில் உள்ள குவாங்துங் மாவாட்ட குவாங்ழவு நகரில் 1927 ஜூன் 21 இல் பிறந்தார். இவர் 1937 முதல் 1945 வரை நடந்த சீன-யப்பானியப் பஓர்க்காலத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். அப்போது இவர் தன் குடும்பத்துடன் அடிக்கடி குவாங்ழவுவில் இருந்து ஆங்காங்குக்கும் சாவோகுவானுக்கும் இலியான் கவுண்டிக்கும் போரினால் நகரவேண்டி இருந்துள்ளது.[1]

யப்பான் 1945 இல் தோல்விகண்ட்தும் சுன்யாட்சென் பல்கலைக்கழக மாணவரைச் சேர்க்கத் தொடங்கியது. அப்பல்கலைக்கழகத்தில் யே சுகுவா இலக்கையம் கற்க விரும்பினார். ஆனால், அவரது தந்தையார் வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு மருத்துவம் படிக்கும்படி வேண்டினார். யே சுகுவா மருத்துவம் படிக்க விரும்பாமல், இருவருக்கும் பொதுவாக யே சுகுவா கணிதவியலைத் தேர்ந்தெடுத்து படிக்க ஒப்பியுள்ளார். அப்போது சுன்யாட்சென் பல்கலைக்கழகத்தில் வானியலுக்கென்று தனித்துறை இல்லை; வானியல் கணித்த்துடன் இணைந்து கணிதம், வானியல் துறையாக விளங்கியது. பேராசிரியர் ழவு யிக்சின் (邹仪新) தாக்கத்தால் இவர் கணிதத்துக்கு மாற்றாக வானியலைப் பெரும்பாடமாக எடுத்துகொள்ள முடிவுசெய்தார்.[1]

வாழ்க்கைப்பணி[தொகு]

யே சுகுவா 1951 இல் தன் கணவர் செங் யிதாயுடன் (程极泰) சாங்காய் சென்றார். செங் அப்போது புதான் பலக்லைக்கழகத்தில் கணித்த் துறையில் கல்வி கற்பித்தார். யே அப்போது பிரெஞ்சு வானியலாளர் கட்டிய ழிகாவேய் (சுயியாகுய்) வான்காணகத்தில் சேர்ந்தார். இது பின்னர் சாங்காய் வான்காணகப் பகுதியாக ஆயிற்று.[1] இவர் 1958 இல் உலகில் கடைசியில் இருந்த சீன அனைத்துப் பொதுநேரம் அளக்கும் துல்லியத்தை மேம்படுத்தும் அறிவியலாளர்களின் குழுவுக்குத் தலைமையேற்றார். உலகில் சீன அனைத்துப் பொதுநேர அளவீட்டின் துல்லியம் 1963 அளவில் இரண்டாவதாக மாறியது. இது சீனாவில் அடிப்படைத் தேசிய செந்தரமாக 1965 இல் அமைக்கப்பட்டது. இப்பணிக்காக இவரது குழு பின்னர் பல தேசிய விருதுகளைப் பெற்றது.[2][1]

பண்பாட்டுப் புரட்சி சீனாவில் 1966 இல் தொடங்கியதும் மற்ர அறிவாளிகலைப் போலவே இவரும் மாட்டுப் பட்டியில் (牛棚) சிறைபிடித்து வைக்கப்பட்டார். அப்போது இவர் வீட்டு வண்ணமடிப்புப் பணிசெய்ய வேண்டியதாயிற்று.[1]

பண்பாட்டுப் புரட்சி 1976 இல் முடிந்ததும், யே சாங்காய் வான்காணக ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணியில் அமர்த்தப்பட்டார். இங்கு இவர் 1981 முதல் 1993 வரை அதன் இயக்குநராகவும் விளங்கினார்.[3] இவரது தலைமையின்கீழ் சாங்காய் வான்காணகம் மிகு நீள அடித்தளக் குறுக்கீட்டளவியும் (மீநீஅகு- VLBI) ஒரு செயற்கைக்கோள் ஒருங்கொளி வீச்சறிவியும் (செஒவீ- SLR) நிறுவப்பட்டன. இந்த ஆய்வு நிலையம் பன்னாட்டுப் புவி சுழற்சிப் பணியிலும் மிக உயர்தொழில்நுட்ப மேம்பாட்டு அடித்தளங்களில் ஒன்றாக பங்கேற்றுள்ளது.[2] இவர் 1991 இல் சீனாவின் மலைமுகட்டு நகர்ச்சி ஆராய்ச்சித் திட்டத்தில் முதன்மை அறிவியலாளராக பணியமர்த்தப்பட்டார். இந்த்த் திட்டம் இந்தியக் கண்டத்திட்டு சீன நிலப் பகுதியை கிழக்காக நகர்த்துவதை நிறுவியது.[3]

இவர் 1978 முதல் 1988 வரை சீன வானியல் கழகத்தின் துணைத்தலைவராக விளங்கினார். பின்னர் அதன் தகைமைத் தலைவரும் ஆனார். இவர் 1988 முதல் 1994 வரை பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் துணைத்தலைவராக இருந்தார். இவர் 1980 இல் இருந்து சீன அறிவியல் கல்விக்கழகத்தின் உறுஒப்பினராக இருந்தார்; 1985 முதல் பிரித்தானிய அரசு வானியல் கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினராக இருந்தார் 1985.[3]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

இவரது நினைவாக பர்ப்புள் மவுண்டன் வான்காணகம் 3241 யேசுகுவா எனும் சிறுகோளுக்குப் பெயரிட்டது.[3].[1] இவர் வானியலுக்கான கோலியூங் கோலீ பரிசைப் பெற்றார்.[4]

தேர்ந்தெடுத்த வெளியீடுகள்[தொகு]

  • Optical observations of time and latitude and the determining of the earth rotation parameters. Proceedings of IAU Colloquium No. 63. Dordrecht: D.Reidel Publishing Company: pp. 11–23. (1982)
  • VLBI measurements of radio positions at three stations. Proceedings of IAU Colloquium No. 63. Dordrecht: D.Reidel Publishing Company: pp. 329–336. (1982)
  • Note on the terrestrial reference system for geodynamics. Proceedings of the 5th IAG Symposium. Washington: National Oceanic and Atmospheric Administration: p. 46. (1982)
  • Intercomparison of celestial reference frame-general principle. Reference Frames in Astronomy and Geophysics. Kluwer Acad Publ: pp. 295–304. (1989)
  • with Wan T.S., Qian Z.H. Progress on Chinese VLBI Network Project. Radio Interferometry. Proceedings of IAU Colloquium No. 131, Provo, Utah: Astronomical Society of the Pacific: pp. 386–389. (1991)[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "zh:叶叔华: 被尊称为"先生"的传奇女性" 叶叔华: 被尊称为"先生"的传奇女性. Sina (in Chinese). 2014-09-15.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 Lee, Stefanowska & Wiles 2003, ப. 640.
  3. 3.0 3.1 3.2 3.3 Lee, Stefanowska & Wiles 2003, ப. 641.
  4. "Awardee of Astronomy Prize Ye Shuhua". Ho Leung Ho Lee Foundation. 2006.
  5. "Ye Shuhua". Shanghai Astronomical Observatory, Chinese Academy of Sciences. Archived from the original on 2018-04-02. பார்க்கப்பட்ட நாள் 2015-03-28.

நூல்தொகை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யே_சுகுவா&oldid=3569353" இலிருந்து மீள்விக்கப்பட்டது