யெகோவாவின் சாட்சிகளும் குருதிக்கொடையும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யெகோவாவின் சாட்சிகள் (Jehovah's Witnesses) திருவிவிலியம் தங்களைக் குருதி மற்றும் குருதிப்பொருட்களை உட்கொள்வதைத் தடை செய்வதாக நம்புகிறார்கள். எனவே இவர்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டிய அவசர நிலையில் கூட இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்களை ஏற்பதில்லை[1]. குருதி மட்டுமின்றி குருதியின் முக்கிய நான்கு பகுதிப் பொருட்களான சிவப்பணு, வௌ்ளையணு, இரத்தத் தட்டு, பிளாஸ்மா இவற்றையும் இவர்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். ஆனால், இரத்தத்தின் இதர பகுதிப் பொருட்களான ஆல்புமின், நோய்எதிர் புரதம், இரத்த உறைதல் கரணிகள் இவற்றை ஏற்பதில் எந்த விதக் கட்டுப்பாடுமில்லை[2].

இக்கொள்கை 1945இல் உருவாக்கப்பட்டதிலிருந்து இன்று வரை சில மாறுதல்களைக் கண்டுள்ளது.

எனவே இவர்கள் குருதியில்லா அறுவை சிகிச்சையை வலியுறுத்துவதோடு அது குறித்து விரிவான விளக்கங்களை அளிக்கும் மையங்களையும் அமைத்துள்ளனர்.

  1. இரத்தத்திற்கு மதிப்புக் காண்பித்தல்
  2. உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்? என்ற சிற்றேட்டில், பக்கங்கள் 13-17-ஐக் காண்க