உள்ளடக்கத்துக்குச் செல்

யூலி விண்டர் கான்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூலி விண்டர் கான்சன்
Julie Vinter Hansen
பிறப்பு(1890-07-20)20 சூலை 1890
கோப்பனேகன், டென்மார்க்
இறப்பு27 சூலை 1960(1960-07-27) (அகவை 70)
மூறேன், சுவிட்சர்லாந்து
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்கோப்பனெகன் பல்கலைக்கழகம்
விருதுகள்வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது (1940)

யூலி மேரி விண்டர் கான்சன் (Julie Marie Vinter Hansen) (20 ஜூலை 1890 – 27 ஜூலை 1960) ஒரு டென்மார்க் வானியலாளர் ஆவார்.

வாழ்க்கை

[தொகு]

இளமை

[தொகு]

விண்டர் கான்சன் டென்மார்க்கில் உள்ல கோப்பனேகனில் பிறந்தார்.

கல்வி

[தொகு]

இவர் கோப்பனேகன் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே பலகலைக்கழகத்தின் வான்காணகத்தில் கணிப்பாளராகப் பணிக்கு அமர்த்தப்பட்டார். மின்னணு ஊழிக்கு முன்பு கணினியின் பணிகளை வானியலாளர்களின் வழிகாட்டுதலின்கீழ் மாந்தக் கணிப்பாளர்களே செய்தனர். பகலைக்கழகத்தில் இப்பணி அமர்த்தத்தை முதலில் பெற்றவர் இவரே ஆவார். பின்னர் இவர் 1922 இல் வான்காணக உதவியாளராக, அதாவது நோக்கீட்டாளராகப் பணியில் அமர்த்தப்பட்டார்.

வாழ்க்கைப்பணி

[தொகு]

நோர்திக் வானியல் மீள்பார்வை இதழின் பதிப்பாசிரியர்

[தொகு]

இவர் ஆற்றல் மிக்க பணியாளர் ஆவார். இயல்பான நோக்கிடுகள், நோக்கிடுகள் சார்ந்த பணிகளை மட்டுமல்லாமல் Nordisk Astronomisk Tidsskrift (நோர்திக் வானியல் மீள்பார்வை) இதழின் பதிப்புப் பணிகளையும் ஏற்று செய்தார்.

பன்னாட்டு வானியல் ஒன்றியம்

[தொகு]

இவர் பின்னர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் தொலைவரிக் குழுமத்தின் இயக்குநரும் அதன் சுற்ற்றிக்கைகளின் பதிப்பாசிரியரும் ஆனார்.

கோப்பனெகன் பல்கலைக்கழக வானியலாளர் பணி

[தொகு]

இவர் 1939 அளவில் கோப்பனேகன் பல்கலைக்கழக வான்கானகத்தின் முதல்வானியலாளர் ஆனார். இவர் சிறுகோல்கள், வால்வெள்ளிகளின் துல்லியமான வட்டணைக் கணிப்பீடுகளுக்குப் பெயர்போனவர் ஆவார்.

தகேயா பிரேண்டித் ரெய்செலெகாத் விருது

[தொகு]

இவர் 1939 இல் தகேயா பிரேண்டித் இரெய்செலெகாத் விருதைப் பெற்றார். இவ்விருது கலை, அறிவியலில் பேரலவு பங்களிப்புகளை வழங்கிய பெண்மணிகளுக்கு வழங்கப்படுவதாகும்மிவர் இந்த விருது பணத்தில் (160, 000 அமெரிக்க டாலர்- 1ஒ,000 DKK) அமெரிக்காவில் இருந்து யப்பான் வரை சென்று மீண்டார். இவர் திரும்பும்போது 1940 இல் இரண்டாம் உலகப்போர் வெடித்ததால் இவரது வீடுநோக்கிய பயணம் கட்டுபாட்டுக்கு உள்ளானது.

கலிபோர்னியா பல்கலைக்கழகப் பணி

[தொகு]

இவருக்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் மார்ட்டின் கெலோகு ஆய்வுநல்கையை வழங்கியது. இது சிலகாலம் இவர் அமெரிக்காவில் பணிசெய்ய உதவியது. மேலும் இவருக்கு 1940 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது வழங்கப்பட்டது.

டென்மார்கு திரும்புதல்

[தொகு]

இவர் 1956 இல் தானிபுரோகு ஆணை நைட் பட்டம் பெற்றார்.[1] பிறகு இவர் 1960 வரை கோபானேகன் பல்கலைக்கழகத்தில் தன்பணியைத் தொடர்ந்தார்.

இறப்பு

[தொகு]

இவர் இயல்பான ஓய்வு பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன் தான் விரும்பி ஓய்வெடுக்கும் விடுமுறை இடமாகிய சுவிசு மலைச்சாரல் ஊரான மூரெனில் 1960 இல் மாரடைப்பால் இறந்தார். இவரது உடல் கோப்பனேகனில் அடக்கம் செய்யப்பட்டார். பீன்னிசு வானியலாளர் இலீசி ஒத்தெர்மா 1940 களில் கண்டறிந்த சிறுகோள் 1544 விண்டர் கான்சென்சியா இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.

தகைமைகளும் விருதுகளும்

[தொகு]
  • தகேயா பிரேண்டித் ரெய்செலெகாத் விருது.
  • மார்ட்டின் கெலாகு ஆய்வுநல்கை
  • தானிபுரோகு ஆணை நைட் பட்டம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mürren, Schweiz. "Julie Vinter Hansen (1890 - 1960) Vinter Hansen, Julie Marie". Digital udgave. பார்க்கப்பட்ட நாள் 19 April 2012.

தகவல் வாயில்கள்

[தொகு]
  • Rasmusen, H.Q. (March 1961). "Julie Marie Vinter Hansen (obituary)". Quarterly Journal of the Royal Astronomical Society 2: 38. Bibcode: 1961QJRAS...2...38.. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூலி_விண்டர்_கான்சன்&oldid=2562743" இலிருந்து மீள்விக்கப்பட்டது