யூஜெனி ஹேமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூஜெனி ஹேமர்
A woman in a dark dress with a wide white collar sitting behind a dais which has papers on it and horizontal striped panels and plants in back of her.
1915 இல் யூஜெனி ஹேமர்
பிறப்பு(1865-11-15)15 நவம்பர் 1865
லியூவென், பெல்ஜியம்
இறப்பு28 ஏப்ரல் 1951(1951-04-28) (அகவை 85)
ஆன்ட்வெர்ப், பெல்ஜியம்
பணிபத்திரிகையாளர், எழுத்தாளர், ஆர்வலர் மற்றும் அமைதிவாதி

யூஜெனி ஹேமர் ( Eugénie Hamer ) (15 நவம்பர் 1865 - ஏப்ரல் 1951) பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளரும், எழுத்தாளரும் , ஆர்வலரும் ஆவார். இவரது தந்தையும் சகோதரரும் பெல்ஜிய இராணுவத்தில் பணியாற்றினர். ஆனால் இவர் ஒரு உறுதியான அமைதிவாதியாக இருந்தார். 1906 இல் இலக்கியம் மற்றும் பெண்கள் சமூக சீர்திருத்த கல்வி மூலம் அமைதிக்கான பெல்ஜியக் கூட்டணி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். கல்வி, அரசியல் நடுநிலைமை மற்றும் பெண்கள் வாக்குரிமை ஆகியவை அமைதிக்கு தேவையான கூறுகள் என்ற நம்பிக்கையில் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. இவர் 1910 இல் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற 18 வது உலகளாவிய அமைதி மாநாடு, 1913 இல் நடைபெற்ற பெல்ஜியத்தின் முதல் தேசிய அமைதி மாநாடு, 1915 இல் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாடு போன்றவற்றில் பங்கேற்றார். இது நிரந்தர அமைதிக்கான சர்வதேச மகளிர் குழுவை உருவாக்க வழிவகுத்தது. பின்னர் அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேச சங்கம் என அறியப்பட்டது. அதே ஆண்டு இந்த அமைப்பின் பெல்ஜிய அத்தியாயத்தை ஹேமர் இணைந்து நிறுவினார்.[1] முதலாம் உலகப் போரின் போது, இவர் ஒரு செவிலியராக முன்வந்து மருத்துவப் பொருட்களைப் பெறவும் மருத்துவ வாகனச் சேவையை உருவாக்கவும் நிதி திரட்டினார்.sfn|Lubelski-Bernard|1977|p=55, volume 2}}

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

ஹேமருக்கு வெற்றி மற்றும் நினைவுப் பதக்கமும் செஞ்சிலுவைச் சங்கத்தால் கெளரவப் பலகையும் வழங்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டில், போரின் போது இவரது செயல்பாடுகளுக்காக குடிமைப் பதக்கத்துடன் (1 ஆம் வகுப்பு) அரச ஆணையால் கௌரவிக்கப்பட்டார். [2] போலந்து இவரை 1923 இல் பொலோனியா ரெஸ்டிடூட்டா ஆணை வழங்கி கௌரவித்தது.[3][4] மேலும் 1938 இல் எஸ்டோனியா லா மெட்ரோபோலில் அறிக்கை அளித்ததற்காக வெள்ளை நட்சத்திரம் என்ற பட்டத்தை வழங்கியது. [3][5][6]

இறப்பு[தொகு]

28 ஏப்ரல் 1951 அன்று ஆண்ட்வெர்ப்பில் இறந்தார் இவர் இறக்கும் நேரத்தில், தனது எழுத்துக்காகவும், அமைதி மற்றும் போர் சேவைக்காகவும் நினைவுகூரப்பட்டார்.[7]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Lubelski-Bernard 1977, ப. 55, volume 2.
  2. Le Matin 1921, ப. 5.
  3. 3.0 3.1 Dupont-Bouchat & Nandrin 2006, ப. 306.
  4. Le Matin 1923, ப. 2.
  5. L'Indépendance Belge 1938, ப. 6.
  6. Le Soir 1938, ப. 4.
  7. Le Soir 1951, ப. 2.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூஜெனி_ஹேமர்&oldid=3664870" இலிருந்து மீள்விக்கப்பட்டது