உள்ளடக்கத்துக்குச் செல்

யுகியோ அட்டொயாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுகியோ அடொயாமா
Yukio Hatoyama
鳩山 由紀夫
93வது சப்பானியப் பிரதமர்
பதவியில்
செப்டம்பர் 2009
ஆட்சியாளர்அக்கிஹிட்டோ
Succeedingடாரோ ஆசோ
9வது ஒக்கைடோ மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1986
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 பெப்ரவரி 1947 (1947-02-11) (அகவை 77)
டோக்கியோ, ஜப்பான்
அரசியல் கட்சிமக்களாட்சிக் கட்சி(1998–இன்று)
பிற அரசியல்
தொடர்புகள்
லிபரல் மக்களாட்சிக் கட்சி (1993 இற்கு முன்னர்)
புதிய கட்சி சக்கிகேக் (1993–1996)
துணைவர்மியூக்கி அட்டொயாமா
முன்னாள் கல்லூரிடோக்கியோ பல்கலைக்கழகம்
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழ்கம்
தொழில்பொறியாளர்
இணையத்தளம்http://www.hatoyama.gr.jp/

யுகியோ அட்டொயாமா (Yukio Hatoyama, 鳩山由紀夫, பிறப்பு: பெப்ரவரி 11, 1947) ஜப்பானிய அரசியல்வாதியும், ஜப்பானிய மக்களாட்சிக் கட்சியின் தலைவரும் ஆவார். ஆகஸ்ட் 2009 இல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் இவரது எதிர்க்கட்சிக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து இவர் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1].

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]
இச்சிரோ அட்டொயாமா தனது இரண்டு பேரர்களுடன்

டோக்கியோவில் பிறந்த அட்டொயாமா சப்பானின் முன்னாள் பிரதமர் இச்சிரோ அட்டொயாமாவின் பேரனும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஈச்சிரோ அட்டொயாமாவின் மகனும் ஆவார். இவரும் இவரது சகோதரர் கூனியோ அட்டொயாமாவும் அட்டொயாமா குடும்பத்தின் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த அரசியல்வாதிகளாவர். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொறொயியல் துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்[2][3]. டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபின்னர் சென்சூ பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியரானார்.

அரசியல்

[தொகு]

ஒக்கைடோ 38வது மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு 1986 ஆம் ஆண்டில் ஆளும் லிபரல் கட்சியில் இருந்து அட்டொயாமா தேர்ந்தெடுக்கப்பட்டார். 1993 இல் ஆளும் கட்சியில் இருந்து விலகி "புதிய கட்சி சாக்கிகேக்" என்ற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்தார். அதன் பின்னர் புதிதாக ஆரம்பிக்காப்பட்ட ஜப்பான் மக்களாட்சிக் கட்சியில் இணைந்தார்.

அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அட்டோயாமா 1999 முதல் 2002 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். பின்னர் அக்கட்சியின் செயலாளர்-நாயகமாக இருந்த அட்டொயாமா[3], தலைவராக இருந்த ஒசாவா 2009, மே 11 இல் பதவி விலகியதை அடுத்து, மீண்டும் கட்சித் தலைவரானார்[4].

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுகியோ_அட்டொயாமா&oldid=3860815" இலிருந்து மீள்விக்கப்பட்டது