யாஸ்மின் நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாஸ்மின் நாயர், இந்தியாவின் மேற்கு வங்காளத்தைப் பூர்விகமாகக் கொண்டவரும், சிகாகோவில் வசித்து வரும் எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமாவார். [1] [2] இவர், ரியான் கான்ராடுடன் இணைந்து "சமத்துவத்துக்கு எதிராக" என்ற அமைப்பை இணை நிறுவனராக நிறுவி நடத்தி வருகிறார். [3]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

யாஸ்மின், 1966 ம் ஆண்டில் கொல்கத்தாவில் பிறந்தார். [4] அங்கிருந்து காத்மாண்டு மற்றும் மும்பை போன்ற நகரங்களில் வசித்து, 1989 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்குச்[3] சென்று தனது பட்டதாரிப் படிப்பை படித்துள்ளார். [5] 2000 ஆம் ஆண்டில் பர்டியூ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.[3]

புதியதாராளவாதம் மற்றும் சமத்துவமின்மை, பாலுறவு, பாலினம்,  பால்புதுமையினர் பிரச்சினைகள் மற்றும் அரசியல், மீட்பு மற்றும் பாதிப்பின் அரசியல், குடியேற்ற நெருக்கடி, பாலியல் கடத்தல், கலை உலகம்,  அரச வன்முறை போன்றவைகளில் பல்வேறு படைப்புகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். [1] [6] இவை, பல்வேறு மேற்கத்திய புத்தகங்கள், இலக்கிய இதழ்கள், மாற்று வெளியீடுகள் போன்றவைகளில் வெளியிடப்பட்டுள்ளன. இவரது பெரும்பாலான படைப்புகள் அவரது  இணையதளத்தில் காப்பகப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்ட்ரேஞ்ச் லவ்: புதியதாராளவாதம், பாதிப்பு மற்றும் சமூக நீதியின் கண்டுபிடிப்பு என்ற அவரது  முதல் புத்தகத்திற்காக 2015 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.[1] [7]

யாஸ்மினின் படைப்புகள் பெரும்பாலும்  இனவெறி, ஏகாதிபத்திய எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் ஒழிப்புக் கண்ணோட்டத்தில் இருந்து வெளிப்படுகிறது, பால்புதுமையானவர், ஊனமுற்றவர், பழுப்புநிறத்தவர், வீட்டுவசதி இல்லாதவர், பெண், தெளிவற்ற வெளிநாட்டவர், தீவிரவாத தலைமுடி கொண்ட பெண், பைத்தியக்காரப் பூனைப் பெண் என்பது போன்ற பல அடையாளங்களை இவரது படைப்பை எதிர்ப்பவர்கள் இவர்மேல் சுமத்தியுள்ளனர். [3] "ஓரினச்சேர்க்கை திருமணம் ஒரு பழமைவாதகாரணம்", [3] "'ஆவணப்படுத்தப்படாதது': ஒரு அடையாளம், எப்படி ஒரு இயக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்தது", மற்றும் "ஸ்காப்ஸ்: கல்வியாளர்கள் மற்றும் இலவசமாக எழுதுபவர்கள்" உட்பட அவரது பிரபலமான படைப்புகள் தனிப்பட்ட இணையதளத்தில் காப்பகப்படுத்தப்பட்டுள்ளன. [6]

படைப்புகள்[தொகு]

புத்தகங்கள்[தொகு]

  • விசித்திரமான காதல்: புதிய தாராளமயம், பாதிப்பு மற்றும் சமூக நீதியின் கண்டுபிடிப்பு (வரவிருக்கும்) [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "An Interview with Yasmin Nair, Part One: There's No Rescuing the Concept of Equality". Hypocrite Reader.
  2. "Look Who Nick Kristof's Saving Now". coreyrobin.com.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Blogs - Queer activist Yasmin Nair discusses her opposition to marriage equality - WBEZ 91.5 Chicago". wbez.org. Archived from the original on 2015-10-27. பார்க்கப்பட்ட நாள் 2023-03-15.
  4. "Chicago Gay History".
  5. "Why Is America Turning To Shit?". The Awl.
  6. 6.0 6.1 "Yasmin Nair". yasminnair.net.
  7. 7.0 7.1 "How liberalism creates Islam as its enemy". The Electronic Intifada. 21 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாஸ்மின்_நாயர்&oldid=3681083" இலிருந்து மீள்விக்கப்பட்டது