யாழ் எரிகற் பொழிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

யாழ் எரிகற் பொழிவு அல்லது லீரிட் விண்கற் பொழிவு (Lyrids) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16 ஆம் நாள் துவங்கி ஏப்ரல் 26 ஆம் நாள் முற்றும் ஒரு செறிவான எரிகற் பொழிவாகும் (Meteor shower)[1]. இந்த எறிகற் பொழிவின் கதிர்விடு புள்ளி யாழ் விண்மீன் குழுவில் அமைந்துள்ளதனால் இவ் எரிகற் பொழிவு இப்பெயரால் வழங்கப்படுகிறது. எரிகற் பொழிவின் மூலம் C/1861 G1 தச்சர் என்றழைக்கப்படும் சீர் பருவ எரி விண்மீன் ஆகும்[2]. யாழ் எரிகற் பொழிவு கடந்த 2600 ஆண்டுகளாக கண்காணிக்கப்பட்டுள்ளது.

யாழ் எரிகற்பொழிவு ஏப்ரல் 16-30 தேதிகளில் காணப்பட்டாலும், இதனைத் தெளிவாக, ஏப்ரல் 21 இரவு 10 மணிக்கு மேலிருந்து ஏப்ரல் 22 அதிகாலை 4 மணி வரை காணலாம்[3].

லீரா (யாழ்) விண்மீன் தொகுதி என்பது வானில் வடக்கிலிருந்து கொஞ்சம் தள்ளி சற்று கிழக்காக சுமார் 50 பாகை உயரத்தில் தெரியும். இதனை இரவு 8 மணிக்கு மேல் பார்க்க முடியும். அந்த விண்மீன் கூட்டத்தில் தெரியும் விண்மீன்களில் மிகவும் பளிச்சென தெரியும் விண்மீன் "வேகா". அது வானில் தெரியும் பிரகாசமான 20 விண்மீன்களில், 5வது பிரகாசமான விண்மீன். இது நம் சூரியனை விட 3 மடங்கு பெரியது. இது சூரியனை விட பிரகாசமான, இளநீல வெண்மை ஒளி வீசும் விண்மீன்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lyrids" (English) 1. Meteor Showers Online. பார்த்த நாள் 2008-08-05.
  2. Arter, T. R.; Williams, I. P. (1997). "The mean orbit of the April Lyrids". Monthly Notices of the Royal Astronomical Society 289 (3): 721–728. http://adsabs.harvard.edu/abs/1997MNRAS.289..721A. பார்த்த நாள்: 2007-11-02. 
  3. லைரிட்.. விண்கற்கள்.. பொழிவு ..!!, பேரா. சோ. மோகனா (கீற்று இணையத்தளம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழ்_எரிகற்_பொழிவு&oldid=1580643" இருந்து மீள்விக்கப்பட்டது