யானைச்சீரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதற்கு நட்சத்திர சீரகம்,அனாட்சிப்பூ என்று பல பெயர்கள் உண்டு.கனி,ந்ட்சத்திர வடிவில் இருப்பதால் நட்சத்திர சீரகம் எனப்படுகிறது. இதன் ஆங்கிலப் பெயர்கள் ஸ்டார் அனசீட் ,சைனீஸ் அலிசீட் என்பனவாகும்.இல்லீசியம் வீரம் என்பது இதன் தாவரப்பெயர்.மெக்னோலியேசி குடும்பத்தைச் சார்ந்த இதன் தாயகம் வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல ஆசியா ஆகும்.கி.பி.1694 ஆம் ஆண்டிலேயே இதனை டச்சுக்காரர்கள் தேயிலையில் மணம் சேர்க்கப் பயன்படுத்தி வந்துள்ளனர்.இது இந்தியாவில் விளைவதில்லை.சீனா,இந்தோசீனா போன்ற நாடுகளிலிருந்து இதனை இந்தியா இறக்குமதி செய்கிறது.

அறிவியல் களஞ்சியம் பாகம் 18 நவம்பர் 2009,பக்கம்14.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யானைச்சீரகம்&oldid=2659307" இலிருந்து மீள்விக்கப்பட்டது