யசோதா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யசோதா தேவி (1927-2004) என்பவர், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். இவர் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 1953 ம் ஆண்டில் பான்ஸ்வாரா தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ராஜஸ்தானின் சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யசோதா தேவி, மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள நாக்டாவில் 1927 ம் ஆண்டு பிறந்தார். பானஸ்தாலி வித்யாபீடத்திலும், பமானியாவில் உள்ள பீல் ஆசிரமத்திலும் கல்வி கற்ற, இவர் சமுதாய நலனைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்காக பிரச்சாரம் செய்துள்ளார். குறிப்பாக பெண்களின் உரிமைகள், மதுவுக்கு எதிரான செயற்பாடுகள் போன்றவைகள் அவற்றில் அடங்கும். மேலும் இவர் அகில இந்து வனவாசி மகிளா பஞ்சாயத்தின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.

ஏப்ரல் 2003 இல் பைரோன் சிங் ஷெகாவத்தால் அவருக்கு ஆதர்ஷ் நாரி என்ற பட்டம் வழங்கப்பட்டது. அந்த ஆண்டு மட்டுமல்லாது மேலும்  இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று பல சமூக அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்த இவர், 3 ஜனவரி 2004 அன்று இறந்தார்.

பன்ஸ்வாரா தொகுதிக்கான தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்பொருட்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸின் நட்வர்லாலை தோற்கடித்து, 63.75 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்து, சட்டமன்ற உறுப்பினரானார். அவரோடு நான்கு பெண்கள் இந்த தொகுதியில் போட்டியிட்டனர்.

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு வெற்றி பெற்று வந்த இரண்டாவது பெண்மணி இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த கம்லா பெனிவால் ஆவார். இவர் 1954ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று 1954 முதல் 1957 வரையில் சட்டமன்ற உறுப்பினரானார்..[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யசோதா_தேவி&oldid=3722724" இலிருந்து மீள்விக்கப்பட்டது