உள்ளடக்கத்துக்குச் செல்

மொஹாக் சிகையலங்காரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொஹாக் சிகையலங்காரத்துடன் ஒரு இளைஞன்
1944 ஆம் ஆண்டில் 101 வது வான்வழிப் பிரிவுப் பிரிவினர்
உக்ரேனிய கொசாக் இசைக்கலைஞர் சப்ரினா அல்லது ஓலைடுடெட்ஸ்

மொஹாக் (mohawk (also referred to as a mohican) என்பது ஒரு சிகை அலங்காரம் ஆகும், இது பொதுவான தலையின் இரு புறங்களிலும் முடியை மழித்துவிட்டு, முன்பக்கத்திலிருந்து பின்பக்க மண்டை வரைக்கும் நடுவில் மட்டுமே நீண்ட முடி இருக்கும்வகையில் விடப்படும். அயர்லாந்தில் கிடைத்த கி.மு. 392 - 201 காலகட்டத்தைச் சேர்ந்த சிவப்பு ஹேக்கின்கான் மனித உடலில் இந்த சிகையலங்காரம் காணப்பட்டுது குறிப்பிடத்தக்கது. மிக உயரமான மோகாக்குக்கு சிகைக்கான உலக சாதனையாக 44.6 அங்குல உயரத்தை கொண்ட கஜுஹிரோ வனநபே என்பவர் வளர்த்த சிகையலங்காரமாம் ஆகும்.[1]

பெயர்

[தொகு]
மோகாக் சிகையலங்காரத்துடன் பாஸிரிக் போர்வீரன், கி.மு 300

மோஹாக் சிகையலங்காரத்தின் பெயர் வட அமெரிக்காவைச் பழங்குடி மக்களும், முதலில் நியூயார்க்கில் உள்ள மோகாக் பள்ளத்தாக்கில் குடியேறியவர்களான,[2] மொஹாக் இனத்தவரின் பெயரில் இருந்து வந்தது. ஹென்றி ஃபோண்டா நடித்து 1939 இல் வெளியான பிரபல ஹாலிவுட் திரைப்படமான டிரம்ஸ் அலாங் த மோஹாக் என்ற திரைப்படத்தில் இருந்து இந்த பெயர் வருகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Guinness World Records 2013. Retrieved 2014-01-12.
  2. Facts for Kids: Mohawk Indians (Mohawks)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொஹாக்_சிகையலங்காரம்&oldid=2762286" இலிருந்து மீள்விக்கப்பட்டது