உள்ளடக்கத்துக்குச் செல்

மொத்த கனிம கார்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1990 களில் கடல் மேற்பரப்பில் கரைந்துள்ள கனிம கார்பனின் அடர்த்தி - உலகளாவிய கடல் தரவு பகுப்பாய்வுத் திட்டம் அளித்த்து.
தொழிற்புரட்சிக்கு முந்தைய 1700 களின் கடல் மேற்பரப்பில் கரைந்துள்ள கனிம கார்பனின் அடர்த்தி- உலகளாவிய கடல் தரவு பகுப்பாய்வுத் திட்டம் அளித்த்து.

மொத்த கனிம கார்பன் (Total inorganic carbon) என்பது ஒரு கரைசலில் உள்ள கனிம கார்பன் இனங்களின் கூட்டுத்தொகை ஆகும். இதை CT அல்லது TIC என்ற ஆங்கில எழுத்துக்களாலும் அல்லது கரைந்துள்ள கனிமக் கார்பன் என்றும் குறிப்பிடுவர். கார்பன் டை ஆக்சைடு, கார்பானிக் அமிலம், பைகார்பனேட் எதிர்மின் அயனி மற்றும் கார்பனேட்டு உள்ளிட்டவை கனிம கார்பன் இனங்களில் அடங்கும் [1]. கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பானிக் அமிலம் இரண்டையும் ஒரே நேரத்தில் CO2 * என்று வெளிப்படுத்துவது மரபுவழியாக பின்பற்றப்படுகிறது. இயற்கையான நீர்சார்ந்த அமைப்புகளின் pH தொடர்பான அளவீடுகளையும் [2], கார்பன் டை ஆக்சைடு பாய்ம அளவீடுகளையும் மேற்கொள்வதில் CT என்பது முக்கியமான ஒரு சிற்றலகு ஆகும்.

CT = [CO2*] + [HCO3] + [CO32−]
  • CT என்பது மொத்த கனிமக் கார்பன்
  • [CO2*] என்பது கார்பன் டை ஆக்சைடு, கார்பானிக் அமில அடர்த்திகளின் கூட்டுத்தொகை ( [CO2*] = [CO2] + [H2CO3])
  • [HCO3−] என்பது பைகார்பனேட்டின் அடர்த்தி
  • [CO32−] என்பது கார்பனேட்டின் அடர்த்தி

இந்த இனங்கள் ஒவ்வொன்றும் பின்வரும் pH- ஆல் உந்தப்படும் இரசாயன சமநிலைடன் தொடர்புடையவையாகும்.

CO2 + H2O is in equilibrium with H2CO3 is in equilibrium with H+ + HCO3 is in equilibrium with 2H+ + CO32−

பல்வேறு இனங்களின் அடர்த்தியும் மற்றும் அடர்த்தி மிகுந்த இனத்தின் ஆதிக்கமும் கரைசலின் pH அளவைப் பொறுத்தது ஆகும். இதை பியெர்ரம் வரைபடம் கொடுக்கிறது.

வேதிச்சமநிலையை கார்பன் டை ஆக்சைடை நோக்கி அழைத்துச் செல்லும் மாதிரியின் அமிலமாக்கல் அளவைக் கொண்டே மொத்த கனிம கார்பன் அளவிடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. C. Michael Hogan. 2010. Calcium. eds. A. Jorgensen, C. Cleveland. Encyclopedia of Earth. National Council for Science and the Environment.
  2. Stanley E. Manahan. 2005. Environmental chemistry. CRC Press
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொத்த_கனிம_கார்பன்&oldid=2748552" இலிருந்து மீள்விக்கப்பட்டது