மைத்திரி நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைத்திரி நடவடிக்கை (அலுவல்ரீதியான பெயர்: Operation Maitri) என்பது 2015 நேபாள நிலநடுக்கத்தினையடுத்து இந்திய அரசும், இந்திய ராணுவமும் மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையாகும்.[1] நிலநடுக்கம் நிகழ்ந்த 15 நிமிடங்களில் இந்தியா தனது நடவடிக்கைகளை தொடங்கியது.

மருத்துவ உதவிகள்[தொகு]

நேபாளத்தில் முகாமிட்டுள்ள இந்திய மருத்துவக்குழு, 65 அறுவைச் சிகிட்சைகளை செய்துமுடித்துள்ளது. காயமடைந்த 540 பேருக்கு சிகிட்சை அளித்துள்ளது[2]

காலக்கோடு[தொகு]

25 ஏப்ரல் 2015[தொகு]

தேசிய பேரிடர் மீட்புப் படையினைச் சேர்ந்த 10 குழுக்களும், மோப்ப நாய்களும் மதிய வேளையில் நேபாளத்தை அடைந்தன[3]. உணவு, கூடாரங்கள் அடங்கிய 43 டன் நிவராணப் பொருட்களை இந்தியா அனுப்பியது[4].

26 ஏப்ரல் 2015[தொகு]

மைத்திரி நடவடிக்கை தொடங்கியது. இந்திய விமானப்படை, நேபாளத்தில் வாழும் ஏறத்தாழ 500 இந்தியர்களை சனிக்கிழமை இரவில் தனது விமானங்களின் மூலமாக இந்தியாவுக்கு கொண்டுவந்தது. [5][6]

மருத்துவர்கள், செவிலியர், பொறியியல் செயற்படையினர், பேரிடர் மீட்புப் படையினர் இவர்களோடு மருத்துவக் கருவிகள், போர்வைகள், கூடாரங்கள் ஆகியன நேபாளம் செல்லும்பொருட்டு 10 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன[7].

நாளின் இறுதிக்குள் 10 டன் போர்வைகள், 50 டன் குடிநீர், 22 டன் உணவுப் பொருட்கள், 2 டன் மருந்துப் பொருட்கள் என நிவாரண உதவிப் பொருட்களை காத்மாண்டு நகருக்கு இந்தியா அளித்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேரிடர் மீட்புப் படையினர், இந்தியர்களை சாலை வழியாக வெளியேற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக 35 பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன. வெளிநாட்டவர்கள் இந்தியா வந்து பின்பு அவர்களின் நாடுகளுக்கு திரும்பும்வகையில் நல்லெண்ண விசாக்களை வழங்கும் பணியினை இந்தியா தொடங்கியது[8] இந்திய இரயில்வே வழங்கிய 1 இலட்சம் குடிநீர் பாட்டில்கள் இந்திய விமானப் படையின் மூலமாக நேபாளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது[9].

27 ஏப்ரல் 2015[தொகு]

இந்த நாளின் காலை வரை, ஏறத்தாழ 1935 இந்தியர்களை 12 விமானங்கள் மூலமாக இந்திய விமானப் படை வெளியேற்றியது[10] இடிபாடுகளை அகற்றவும், சாலைகளை செம்மைப்படுத்தவும் பொறியியல் செயல்வீரர்கள் அடங்கிய 10 குழுக்களை அனுப்புவதென இந்திய இராணுவம் முடிவெடுத்தது. மருத்துவக் குழுக்களுக்கு உதவும்வகையில் ஆக்சிஜன் உருளைகள் கொண்டுசெல்லப்பட்டன[11]. தனது நாட்டினரை நேபாளத்திலிருந்து பத்திரமாக வெளியேற்ற உதவுமாறு ஸ்பெயின் விடுத்த கோரிக்கைக்கு இந்தியப் பிரதமர் உறுதியளித்தார்[12].

மேற்கோள்கள்[தொகு]

  1. சவாலான சூழலில் நேபாளத்தில் இருந்து இதுவரை 2,500 பேரை மீட்டது விமானப் படை
  2. "Operation Maitri to continue". தி இந்து. 29 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "India sends 10 NDRF Teams for Relief and Resue Operation in Nepal". news.biharprabha.com. 25 April 2015. http://news.biharprabha.com/2015/04/india-sends-10-ndrf-teams-for-relief-and-resue-operation-in-nepal/. பார்த்த நாள்: 25 April 2015. 
  4. "Nepal Earthquake: Major Aftershock Hits Kathmandu as Toll Climbs". NBC News.
  5. "Indian Army Aid to Nepal Named 'Operation Maitri'". NDTV.
  6. "LIVE: Death toll crosses 2200 in Nepal earthquake, heavy rains may trigger landslides". The Indian Express.
  7. "Nepal earthquake death toll climbs to 2,150 as India launches aid mission 'Operation Maitri'". International BUsiness Times.
  8. "Operation Maitri: India launches massive relief and rescue efforts in Nepal". firstpost.com.
  9. "Nepal quake: Indian Railway provides one lakh 'rail neer' bottles as relief". Daily News and Analysis (New Delhi). 26 April 2015. http://www.dnaindia.com/india/report-nepal-quake-indian-railway-provides-one-lakh-rail-neer-bottles-as-relief-2080790. பார்த்த நாள்: Apr 26, 2015. 
  10. "#NepalEarthquake As of Now: IAF has evacuated 1935 passengers from Kathmandu utilising 12 aircraft sorties". Twitter.com.
  11. "Operation Maitri in full swing". The Telegraph.
  12. "LIVE: US offers $10 mn for Nepal earthquake relief; India to help evacuate Spanish nationals". Zee News.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைத்திரி_நடவடிக்கை&oldid=2975974" இலிருந்து மீள்விக்கப்பட்டது