மைக்கெல் டி ருய்ட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைக்கேல் ஆட்ரியென்ஸ்சூன் டி ருய்ட்டர் (24 மார்ச் 1607–29 ஏப்ரல் 1676) ஒரு டச்சு கப்பல் படை அட்மிரல் (admiral).[தெளிவுபடுத்துக] அவர் வரலாற்றில் மிக திறமையான அட்மிரல்களின் ஒருவராக விளங்கினார். 17 ஆம் நூற்றாண்டின் ஆங்கில-இடச்சு போர்களில் அவரது பங்கிற்காக அவர் மிகவும் புகழ் பெற்றவராக இருந்தார். அவர் ஆங்கிலேயர் மற்றும் பிரஞ்சுகாரர்களுக்கு எதிராக போராடி பல பெரிய வெற்றிகளை குவித்தார். மேட்வே போர் இவ்வெற்றிகளில் அதிகம் பேசப்பட்ட ஒன்று.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

டி ருயெட்டர், 1607 ஆம் ஆண்டில், நெதர்லாந்தில் உள்ள விலிஸ்சிங்கென்னில் பிறந்தார், ஆட்ரியென் மைக்கேல்ஸ்சூன் மற்றும் ஆக்ஜே ஜான்சாட்சர் ஆகியோரின் மகனாகப் பிறந்தார்.[1] டி ருய்ட்டரின் ஆரம்ப வாழ்க்கை பற்றி அறிந்தவை விஷயங்கள் சில மட்டுமே. ஆனால் அவர் 11 வயதில் ஒரு மாலுமியாக இருந்தார். 1622 ஆம் ஆண்டில் ஸ்பேனிஷ்களுக்கு எதிராக டச்சு இராணுவத்தில் ஒரு மஸ்கடியராக அவர் போராடினார்.

போர்கள் மற்றும் மரணம்[தொகு]

இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்களில் மைக்கெல் டி ருய்ட்டர் நெதர்லாந்தின் நிலைமையை காப்பாற்றினார். இரண்டாவது போரில் முதலில்ஆங்கிலேயர்கள் வெற்றிகளைக் குவித்தாலும், இந்தப் போர் டச்சுக்காரர்களின் வெற்றியில் முடிந்தது. இதில் முக்கியப் பங்கு டி ருய்ட்டருக்கு உண்டு.

மூன்றாவது ஆங்கில-இடச்சுப் போரில் 1676 ஆம் ஆண்டில், ஸ்பெயினின் கடற்படை தளத்தில் மெஸ்ஸினா எழுச்சியை அடக்குவதற்கு உதவியதுடன் ஸ்ட்ராம்போலி போர் மற்றும் அகஸ்டா போர் ஆகியவற்றில் பிரெஞ்சு கடற்படைக்கு எதிராக போராடினார். அங்கு அவர் பீரங்கிகளால் தாக்கப்பட்டு மரணமடைந்தார்.16 மார்ச் 1677 இல், டி ருய்ட்டருக்கு ஒரு விரிவான அரசு இறுதிச் சடங்கு வழங்கப்பட்டது. அவருடைய உடல் நியாவெ கெர்கில் (புதிய சர்ச்) ஆம்ஸ்டர்டாமில் புதைக்கப்பட்டது.

Reference[தொகு]

  1. Prud’homme , 1996, p. 19
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கெல்_டி_ருய்ட்டர்&oldid=2754192" இலிருந்து மீள்விக்கப்பட்டது