மேற்குப் பகுதிகள் குறித்த மகா தாங் பதிவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்குப் பகுதிகள் குறித்த மகா தாங் பதிவுகள்
1773–1782இல் சேகரிக்கப்பட்ட ஒரு பதிப்பின் ஒரு பக்கம்
பண்டைய சீனம் 大唐西域記
நவீன சீனம் 大唐西域记
Literal meaningமகா தாங் மேற்குப் பகுதி பதிவுகள்

மேற்குப் பகுதிகள் குறித்த மகா தாங் பதிவுகள் (Great Tang Records on the Western Regions) என்பவை சீன வரலாற்றுவரைவியலில் நடு சீனாவின் சங்கன் என்ற பகுதியில் இருந்து மேற்குப் பகுதிகளுக்கு யுவான் சுவாங் மேற்கொண்ட 19 ஆண்டு காலப் பயணம் குறித்த ஒரு குறிப்பு ஆகும். வடமேற்கு சீனாவில் தற்போதைய சிஞ்சியாங் அருகில் உள்ள பட்டுப் பாதைகளின் வழியாக இந்தப் பௌத்த அறிஞர் பயணம் மேற்கொண்டார். மேலும் நடு ஆசியா மற்றும் தெற்காசியாவில் இருந்த அண்டை பகுதிகள் வழியாகவும் பயணங்கள் மேற்கொண்டார். இந்த சீன பகுதிகள் தவிர்த்து தெற்கே காஞ்சிபுரம் வரையிலும்,[1] இந்தியாவின் வெளிப்புற விளிம்பு வழியாக யுவான் சுவாங் பயணம் மேற்கொண்டார். யுவான் சுவாங்கின் பயணங்கள் சீனா மற்றும் இந்தியாவின் பண்பாட்டுக் கலப்பு ஆய்வுகளில் ஒரு முக்கிய இடத்தை வரையறுத்து காட்டுவதோடு மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமான பண்பாட்டுக் கலப்பு ஆய்வுகளிலும் எல்லைகளை வரையறுக்கின்றன. யுவான் சுவாங்கின் புனிதப் பயணம் குறித்து மட்டுமல்லாமல் தாங் சீனாவின் சுற்றியிருந்த பட்டணங்கள் மற்றும் மாகாணங்கள் குறித்த இவரது குறிப்புகளையும் குறிப்பிடுகின்றன.

இந்நூல் 646ஆம் ஆண்டு தொகுக்கப்பட்டது. 626 மற்றும் 645 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இவர் மேற்கொண்ட பயணங்களை விளக்கியது. யுவான் சுவாங்கின் ஒரு சீடரான பியாஞ்சி யுவான் சுவாங்கின் மேற்பார்வையின் கீழ் இந்நூலை ஓர் ஆண்டுக்கும் மேலாக தொகுத்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Travel Records of Chinese Pilgrims Faxian, Xuanzang, and Yijing" (PDF). Columbia University.
  2. Ray, Haraprasad (2000). "Indo-Chinese Diplomatic Relations in Historical Perspectivethe South Indian Chapter". Proceedings of the Indian History Congress 61: 1093–1103.