மேரி ஜாக்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேரி ஜாக்சன்
Mary Jackson
ஒரு கருவியின் கட்டுபாட்டைச் சரிசெய்தபடி அமர்ந்துள்ள மேரி ஜாக்சன்
நாசாவில் 1980 இல் ஜாக்சன்
பிறப்புமேரி வின்சுடன்
(1921-04-09)ஏப்ரல் 9, 1921
ஆம்படன், வர்ஜீனியா, அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 11, 2005(2005-02-11) (அகவை 83)
ஆம்படன், வர்ஜீனியா, அமெரிக்கா
Resting placeபெத்தேல் ஏ. எம். ஈ பேராயக் கல்லறை, ஆம்படன், வர்ஜீனியா
தேசியம்அமெரிக்கர்
துறைவான்-விண்வெளிப் பொறியியல், கணிதவியலாளர்
பணியிடங்கள்நாசா
கல்வி கற்ற இடங்கள்ஆம்ப்டன் நிறுவனம்

மேரி வின்சுடன் ஜாக்சன் (Mary Winston Jackson) (ஏப்பிரல் 9, 1921 – பிப்ரவரி 11, 2005) ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கக் கணிதவியலாளரும் நாசாவின் வான் – விண்வெளிப் பொறியியலாளரும் ஆவார். இவர் வர்ஜீனியாவில் அமைந்த இளாங்கிளே ஆராய்ச்சி மையத்தில் தன் வாழ்நாள் முழுவதும் பணிபுரிந்தார். அங்கு இவர் மாதக் கணிப்பாளராக மேற்குப் புலக் கணிப்புப் பிரிவில் சேர்ந்தார். லிவர் உயர்நிலைப் பொறியியல் வகுப்புகளை எடுத்துள்ளார். இவர் நாசாவில் 1958 இல் பொறியாளராகிய முதல் கருப்பினப் பெண்மணியாவார்.

மறைநிலை ஆளுமைகள்: அமெரிக்கக் கனவும் விண்வெளிப் போட்டியில் உதவிய கருப்பினப் பெண் கணிதவியலாளர்களும் (2016), நாசாவில் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தாக்கம் விளைவித்த ஆப்பிரிக்க அமெரிக்கக் கருப்பினப் பெண் கணிதவியலாளர்களும் பொறியாளர்களும் பற்றிய வரலாறு, எனும் மார்கோட் இலீ செட்டெர்லி எழுதிய நூலில் விவரித்த ஆராய்ச்சியாளர்களில் மேரி ஜாக்சனும் ஒருவர் ஆவார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

வாழ்க்கைப்பணி[தொகு]

சிறப்புகள்[தொகு]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

  • அப்பொல்லோ குழு சாதனை விருது, 1969[1][2]
  • மாற்றுத் திறனாளி இளைஞருக்குத் தன்னிகரற்ற சேவைக்கான டேனியல்சு முன்னாள் மாணவர் விருது[2]
  • தேசிய நீக்ரோ மகளிர் மன்றத்தின் தன்னிகரற்ற சமுதாயச் சேவைத் தகைமைச் சான்றிதழ்[2]
  • மாந்தநேய முகமைகளின் பேராளராக ஒருங்கிணைந்த கூட்டாட்சிப் பரப்புரைப் பணிக்கான தகவுறு சேவை விருது, 1972[2]
  • இலாங்கிளே ஆராய்ச்சி மையத்தின் தன்னிகரற்ற தன்னார்வலர் விருது, 1975[2]
  • இலாங்கிளே ஆராய்ச்சி மையத்தின் தன்னார்வலர் விருது, 1976[1]
  • தீவகத் தன்னிகரற்ற பெண் அறிவியலாளருக்கான அயோட்ட இலாம்டா மகளிர் கழக விருது, 1976[2]
  • கிங் தெரு சமுதாய மையத்தின் தன்னிகரறுமை விருது[2]
  • தேசியத் தொழில்நுட்பக் கழகத்தின் பாராட்டு விருது, 1976[2]
  • தனிச் சேவைக்கான ஆம்ப்டன் சாலைகள் கட்டிலின் " பொற்செயல் நூல்" விருது[2]
  • இலாங்கிளே ஆராய்ச்சி மையத்தின் பாராடுச் சான்றிதழ், 1976–1977[2]

வெளியீடுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Shetterly, Margot Lee (November 22, 2016). "Mary Jackson Biography". NASA. https://www.nasa.gov/content/mary-jackson-biography. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9 Mary W. Jackson (PDF), National Aeronautics and Space Administration, October 1979, archived from the original (PDF) on October 23, 2015, retrieved August 16, 2016

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_ஜாக்சன்&oldid=3777800" இருந்து மீள்விக்கப்பட்டது