மேசர்
கதிர்வீச்சின் தூண்டப்பட்ட உமிழ்வால் செறிவூட்டப்பட்ட மீயலை. ( Microwave Amplification by Stimulated Emission of Radiation ) லேசர் செயல்படும் தத்துவத்தின் அடிப்படையிலேயே மேசரும் செயல்படுகிறது. லேசரில் இருந்து வெளிப்படும் கதிர் கண்ணுரு ஒளியின் அலைநீளத்திலும் மேசரில் இருந்து வெளிப்படும் கதிர் மீயலையின் அலைநீளத்திலும் உள்ளது. 1954 - ஆம் ஆண்டு சாள் டெளன்சு ( Charles Townes )என்ற அமெரிக்க இயற்பியலாளரால் வடிவமைக்கப்பட்டது. இந்த அறிவியல் வேலைக்காக டெள்ன்சுக்கு 1964 - ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1][2][3]
மேசரின் பயன்பாடுகள்
[தொகு]மேசர் பெருக்கிகள் செறிவு-குறைந்த சைகைகளைப் பெருக்கம் செய்யவும் வானொலியலைத் தொலைநோக்கியிலும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, வானொலியலை விண்ணியல், ரேடார், மீயலை நிறமாலையியல் ஆகிய துறைகளிலும் பயன்படுத்தப் படுகின்றன.
ஆதாரம்
[தொகு]இயல்பியல் களஞ்சியம் -- பக். 63—ப.க. பொன்னுசாமி -- சென்னைப் பல்கலைக்கழகம்—1997 பதிப்பு.
இப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்ட கலைச்சொற்கள்
[தொகு]- மேசர் பெருக்கி = Maser Amplifier
- வானொலியலைத் தொலைநோக்கி = Radio Telescope
- செயற்கைக்கோள் தகவல் தொடர்பு = Satellite Communication
- வானொலியலை விண்ணியல் = Radio Astronomy
- மீயலை நிறமாலையியல் = Microwave Spectroscopy
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Townes, Charles H. (1964-12-11). "Production of coherent radiation by atoms and molecules - Nobel Lecture" (PDF). The Nobel Prize. p. 63. Archived (pdf) from the original on 2020-08-27. பார்க்கப்பட்ட நாள் 2020-08-27.
We called this general type of system the maser, an acronym for microwave amplification by stimulated emission of radiation. The idea has been successfully extended to such a variety of devices and frequencies that it is probably well to generalize the name - perhaps to mean molecular amplification by stimulated emission of radiation.
- ↑ American Institute of Physics Oral History Interview with Weber
- ↑ Mario Bertolotti (2004). The History of the Laser. CRC Press. p. 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1420033403.