எம். சரவணன் (திரைப்படத் தயாரிப்பாளர்)
ஏவிஎம் சரவணன் | |
|---|---|
| பிறப்பு | 3 திசம்பர் 1939 |
| இறப்பு | திசம்பர் 4, 2025 (அகவை 86) |
| அறியப்படுவது | திரைப்படத் தயாரிப்பாளர் |
ஏ. வி. எம் சரவணன் (M. Saravanan, 3 திசம்பர் 1939 – 4 திசம்பர் 2025) என்றழைக்கப்படும் எம். சரவணன், மெ. சரவணன் அல்லது மெய்யப்பன் சரவணன் என்பவர் ஒரு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளராவார்.[1][2][3] இவரின் தந்தையான ஆவிச்சி மெய்யப்பச் செட்டியாரால் உருவாக்கப்பட்ட ஏவிஎம் திரைப்பட நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். சென்னையில் பிறந்து வளர்ந்த சரவணன் பள்ளி இறுதி வகுப்புவரை படித்துள்ளார்.
வகித்த பொறுப்புகள்
[தொகு]இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர், அகில உலகத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத்தலைவர், தமிழ்நாட்டுச் சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டுக் கழக இயக்குநர், சென்னை மாநகர செரீப், ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
விருதுகள்
[தொகு]- தமிழக அரசின் கலைமாமணி விருது
- புதுவை அரசின் பண்பின் சிகரம் விருது[4],
- சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருது - தமிழ் - நானும் ஒரு பெண் (1963)[5][6]
- சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருது - தமிழ் - சம்சாரம் அது மின்சாரம் (1986)[7][8]
இறப்பு
[தொகு]சரவணன் சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2025 திசம்பர் 4 அன்று தனது 86-ஆவது வயதில் வயது மூப்பின் காரணமாகக் காலமானார்.[9][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ AVM Productions to split
- ↑ "For the family, from AVM". தி இந்து. 11 July 2003 இம் மூலத்தில் இருந்து 6 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606103544/http://www.hinduonnet.com/thehindu/fr/2003/07/11/stories/2003071101220200.htm. பார்த்த நாள்: 24 January 2010.
- ↑ "Finger on people's pulse". தி இந்து. 14 May 2004 இம் மூலத்தில் இருந்து 26 August 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100826111941/http://www.hindu.com/thehindu/fr/2004/05/14/stories/2004051401350100.htm. பார்த்த நாள்: 24 January 2010.
- ↑ தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்72
- ↑ Reed, Sir Stanley (1964). "The Times of India Directory & Yearbook, Including Who's who".
- ↑ "Collections". 1991.
- ↑ "The Awards" (JPG).
- ↑ "Collections". 1991.
- ↑ "உடல்நலக்குறைவால் ஏ.வி.எம். சரவணன் காலமானார்". மாலை மலர். 4 December 2025. Retrieved 4 December 2025.
- ↑ "Legendary producer AVM Saravanan, pillar of Tamil cinema, dies at 86" (in en). இந்தியா டுடே. 2025-12-04 இம் மூலத்தில் இருந்து 2025-12-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20251204035057/https://www.indiatoday.in/movies/regional-cinema/story/avm-saravanan-passes-away-veteran-tamil-cinema-producer-legacy-remembered-2830398-2025-12-04.