மெகரூன் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெகரூன் ஏரி (Mehrun Lake) என்பது ஜல்கான் அருகே அமைந்துள்ள இயற்கை ஏரியாகும். மெகரூன் ஏரியின் பெயரானது இந்தப் பகுதியின் பெயரான ஜல்கானிலிருந்து தோன்றியதாகும். ஜல் என்பது தண்ணீரைக் குறிக்கும். இந்த ஏரியானது இப்பகுதி மக்களுக்குக் குடிநீருக்காகவும் விவசாயத்திற்காகவும் 75 ஹெக்டேர் பரப்பளவில் தோற்றுவிக்கப்பட்டது.[1] பின்னர் இந்த ஏரிக்கரையில் பல பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டன. எனவே அருகிலுள்ள நகரங்களிலிருந்தும் பல இங்கு வருகின்றனர். இந்த ஏரி ஜல்கான் மக்களுக்குப் பொழுது போக்குவதற்கான இடமாக உள்ளது. இந்த ஏரிக்கு அருகில் பல பூங்காக்கள் உள்ளன. இந்த ஏரியில் சாத் பூஜை பயிற்சி செய்ய உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து பலர் இந்நகரத்திற்குக் குடியேறுகின்றனர்.[2]

ஜல்கான் நகராட்சி இந்த ஏரியை மேம்படுத்தி விநாயகர் கோயில் கட்ட முன்னெடுப்பினைத் துவக்கியுள்ளது. இதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-07-21. பார்க்கப்பட்ட நாள் 2021-07-21.
  2. "The Famous Mehrun Lake". Indiamapped.com. பார்க்கப்பட்ட நாள் 2017-04-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெகரூன்_ஏரி&oldid=3568418" இலிருந்து மீள்விக்கப்பட்டது