மூளை அலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனிதனின் மூளை கோடிக்கணக்கான நரம்பணுக்களால் உருவாக்கப்பட்டது. நரம்பணுக்கள் ஒன்றுக்கொன்று மின் சைகைகளைப் (signals) பரிமாறிக் கொள்ளும்போது மூளை அலைகள் உருவாகின்றன. மூளை அலைகள் பல வகைப்படும். அவையாவன:[1]

  • மிகக் குறைந்த அதிர்வெண் அலைகள்: இவற்றின் அதிர்வெண் 0.5 எர்ட்சுக்கும் குறைந்தது ஆகும். இவை மூளையின் இயக்கத்துக்கு அடிப்படையான அலைகள் எனக் கருதப்படுகின்றன.
  • டெல்டா அலைகள்: இவற்றின் அதிர்வெண் 0.5 எர்ட்சு முதல் 3 எர்ட்சு வரை ஆகும்.
  • தீட்டா அலைகள்: இவற்றின் அதிர்வெண் 3 எர்ட்சு முதல் 8 எர்ட்சு வரை ஆகும்.
  • ஆல்பா அலைகள்: இவற்றின் அதிர்வெண் 8 எர்ட்சு முதல் 12 எர்ட்சு வரை ஆகும்.
  • பீட்டா அலைகள்: இவற்றின் அதிர்வெண் 12 எர்ட்சு முதல் 38 எர்ட்சு வரை ஆகும்.
  • காமா அலைகள்: இவற்றின் அதிர்வெண் 38 எர்ட்சு முதல் 42 எர்ட்சு வரை ஆகும்.


மூளையில் மாற்றங்கள் நிகழும்போது மூளை அலைகளும் மாறுகின்றன. போதைப் பொருட்கள் சாப்பிடும் போது மூளை அலைகளில் மாற்றம் நிகழ்கின்றது. அதுபோலவே, ஓகம் செய்வதாலும் மூளை அலைகளில் மாற்றம் நிகழ்வது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூளை_அலைகள்&oldid=3600173" இலிருந்து மீள்விக்கப்பட்டது