மூளைவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மூளையில் ஏற்படும் வாதத்தை மூளைவாதம் என்பர். இது ஒரு நோயல்ல. மூளையில் ஏற்படும் ஓர் ஊனம் என்று கூறலாம். இந்நிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் என்பது தவறான கருத்து. மருந்துகளினாலோ சிகிச்சை முறைகளினாலோ இந்நிலையைக் குணப்படுத்த முடியாது. இந்நிலையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 75 விழுக்காடு மனவளர்ச்சி குன்றியவர்களாக இருக்கிறார்கள். மனவளர்ச்சிக் குறை தவிர பேச்சு மற்றும் கேட்டலில் குறைபாடு, உணர்வுகளில் ஏற்படும் குறைபாடு, பார்வைக் கோளாறு, வலிப்பு, புலனுணர்வு மாறுபாடுகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் அதிகமாகவோ இக்குழந்தைகளுக்கு ஏற்படலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூளைவாதம்&oldid=1928649" இருந்து மீள்விக்கப்பட்டது