மூணுகட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மூணுகட்டை ஒரு சூது-விளையாட்டு. திருவிழாக் காலத்தில் மக்கள் பணம் கட்டி விளையாடுவர். இதில் பொதுவாக மக்களுக்கு ஏமாற்றமாகவே முடியும்.

ஆடும் முறை[தொகு]

6 கட்டங்கள் போடப்பட்ட அட்டையில் எண்களும் எண்ணைக் காட்டும் புள்ளிக்குறிகளும் வரையப்பட்டிருக்கும். மக்கள் தம் விருப்பம் போல எந்தக் கட்டத்தில் வேண்டுமானாலும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கட்டலாம்.

ஆட்டம் காட்டுபவர் தாயக் கட்டையை உருட்டுவார். அதில் எந்த எண் விழுகிறதோ அந்த எண்-கட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் பணம் கட்டியவருக்கு இரு மடங்காகத் திருப்பித் தரப்படும். பிற கட்டங்களில் கட்டிய பணத்தை விளையாட்டுக் காட்டுபவர் சுருட்டிக்கொள்வார். இக்காலத்தால் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூணுகட்டை&oldid=1020925" இருந்து மீள்விக்கப்பட்டது