மூச்சுப் பெருங்குழாய்த் திறப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூச்சுப் பெருங்குழாய்த் திறப்பு' (tracheostomy) என்பது மூச்சுப் பெருங்குழாயின் முன்புறச் சுவரில் துளையிட்டு குழாய் ஒன்றைச் செருகுவதின் மூலம் நோயர் மூக்கு வழியாகுவோ வாய் வழியாகவோ மூச்சு விடாமல் செயற்கையாக உண்டாக்கப்பட்ட இத் துளையின் (stoma) மூலம் மூச்சு விடும் படி செய்வது ஆகும். இது உடனடி காரணங்களுக்காகவோ அல்லது திட்டமிட்ட அறுவை சிகிச்சைகளின் போதோ செய்யப்படலாம்.

காரணங்கள்[தொகு]

அ. மூச்சுத் தடை நிலை[தொகு]

1. தொற்று[தொகு]

திடீர் குரல்வளை-மூச்சுப் பெருங்குழாய்- காற்றுக்கிளைக் குழாய்த் தொற்று திடீர் குரல்வளை மூடித் தொற்று நா சீழ்க்கட்டி

2. அடிபடுதல்[தொகு]

குரல் வளை மற்றும் மூச்சுப் பெருங்குழாயில் ஏற்படும் வெளிக்காயம் அகநோக்கிகள் பயனபாட்டால் ஏற்பட்டால் உண்டான காயம் கீழ்த்தாடை முக எலும்பு முறிவு

3. புற்று[தொகு]

மூச்சுப் பாதையில் வளரும் தீங்கற்ற மற்றும் கொடிய புற்றுக்கட்டிகள்

4. மூச்சுப் பாதையில் வேற்றுப் பொருள் நுழைதல்[தொகு]

5. மூச்சுப் பாதை கோழைப் படல வீக்கம்[தொகு]

நீராவி, எரிச்சலூட்டும் புகைகள், ஒவ்வாமை, கதிர் வீச்சு

6. பிறவிக் குறைபாடுகள்[தொகு]

ஆ. சுரப்பு தேங்குதல்[தொகு]

1. இரும இயலா நிலை[தொகு]

ஆழ்மயக்கம், மூச்சியக்கத் தசை செயலிழப்பு, மூச்சியக்கத் தசை இறுக்கச்சுருக்கம்

2. வலியுடன் கூடிய இருமல்[தொகு]

மார்புக் கூட்டு காயம், பல் விலா எலும்பு முறிவு, நுரையீரலழற்சி

இ. போதாத மூச்சு[தொகு]

நாட்பட்ட நுரையீரல் நோய்கள்

வகைகள்[தொகு]

உடனடி[தொகு]

மூச்சுப் பாதை முழுதும் அடைபட்டு மூச்சுக்குழலுக்குள் குழாய் செருகுதல் (endotracheal intubation) இயலாத நிலையில் நோயரின் உயிரைக் காக்கும் பொருட்டு இவ்வறுவை உடனடியாக நிகழ்த்தப்படும்.

திட்டமிட்ட[தொகு]

முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு அறுவை அரங்கில் வைத்து மூச்சுக்குழலுக்குள் குழாய் செருகி அவசரமின்றிச் செய்யப்படும். இது நோய் நீக்கும் பொருட்டு ‌(therapeutic) நோய் தவிர்ககும் (prophylactic) பொருட்டோ செய்யப்படும

நிரந்தர[தொகு]