மு. சிவலிங்கம் (இலங்கை எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மு.சிவலிங்கம்

நாடு இலங்கை
நாட்டுரிமை இலங்கை
இலக்கிய வகை சிறுகதை, நாவல்
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
அரச சாகித்திய விருது, கலாபூஷணம் விருது
துணைவர்(கள்) சியாமளா குமாரி
பிள்ளைகள் 3
www.musivalingam.com

மு. சிவலிங்கம் இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் அரசியல்வாதியும் ஆவார். பல சிறுகதைகளை எழுதியுள்ளார். கலாபூஷணம் பட்டம் பெற்றவர்[1]. இவர் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் செயலாளரும், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமாவார். வீரகேசரி பத்திரிகையின் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். தொழிற்சங்க பத்திரிக்கையின் பொறுப்பாசிரியராக இருந்தவர். அரசபாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றியவர்.

அரசியலில்[தொகு]

மலையக மக்கள் முன்னணி என்ற ஒரு அரசியல் கட்சியை ஸ்தாபித்தவர்களுள் முக்கியமானவர். அக் கட்சியின் செயலாளர் நாயகமாகக் கடமை புரிந்தவர். மத்திய மாகாண சபையின் பிரதி தலைவராகவும் பணி புரிந்தவர். அரசியல் காரணங்களுக்காக இரண்டு முறை சிறை சென்று திரும்பியவர்.

கலையுலகில்[தொகு]

விருதுகள்[தொகு]

 • மூன்று முறை அரச சாகித்திய விருதுகள்
 • சுதந்திர இலக்கிய அமைப்பின் விருது
 • தமிழியல் விருது
 • கனகசெந்திநாதன் விருது
 • கலாபூஷணம் விருது
 • கரிகாற்சோழன் விருது

எழுதிய நூல்கள்[தொகு]

 • ஒப்பாரி கோச்சி (சிறுகதைத் தொகுப்பு) (2010)
 • மலைகளின் மக்கள் (சிறுகதைத் தொகுப்பு) (1992)
 • ஒரு விதை நெல் (சிறுகதைத் தொகுப்பு) (2004)
 • வெந்து தணிந்தது காலம் (சிறுகதைத் தொகுப்பு) (2013)
 • பஞ்சம் பிழைக்க வந்த சீமை (நாவல்) (2015)
 • மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள் (ஆய்வு நூல்) (2007)
 • தேயிலை தேசம் (மொழிப் பெயர்ப்பு ) (2003)
 • சிறுவர் பண்ணைகள் (2016)
 • உயிர் (நாவல்) (2018)

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]