உள்ளடக்கத்துக்குச் செல்

மு. க. சு. சிவகுமாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலாநிதி மு. க. சிவகுமாரன் (குரும்பசிட்டி, இலங்கை) ஜேர்மனிய, ஈழத்து எழுத்தாளர். ஓவியர். நுண்கலைப்பட்டதாரி. வெற்றிமணி இதழின் ஆசிரியர். இவர் கண்ணா என்ற புனைபெயரில் ஓவியங்களையும், நிலாமகள் என்ற புனைபெயரில் கவிதைகளையும் வடித்துள்ளார்.

இவர் தனது பதினோராவது வயதிலேயே குரும்பசிட்டி சன்மார்க்க இளைஞர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். மகாஜனக்கல்லூரியின் பழைய மாணவர். சன்மார்க்க தீபம் என்ற கையெழுத்துப் பத்திரிகையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எழுதி வெளியிட்டவர். இவர் தற்போது ஜேர்மனயில் வாழும் வேளையிலும் வெற்றிமணி வெளியீடாக பல நூல்களை வெளியிட்டுள்ளார். தனது சொந்தப்படைப்புகள், வெற்றிமணியில் வெளிவந்த ஆக்கங்களின் தொகுப்புகள், மற்றையவர்களின் படைப்புகள் என 15க்கும் மேற்பட்ட பல்வேறு தொகுதிகள் வெற்றிமணி வெளியீடாக வெளிவந்துள்ளன.

வெற்றிமணி வெளியீடுகள்[தொகு]

  • தமிழே காதல் (சித்திரக்கவிதைகள், நிலாமகள்)
  • யேர்மனியில் கலாநிதி கந்தவனம் - 2002 நூலகத்தில்
  • காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி (ஆன்மீகக் கட்டுரைகள், இந்து மகேஷ்) -2004
  • திறவுகோல் (இது ஒரு விண்ணாணம்) - 2007 நூலகத்தில்
  • அதிசய உலா (வெற்றிமணி இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு) -2007
  • சிவத்தமிழ் (ஆன்மீகக் கட்டுரைகள், தொகுப்பு) -2007
  • சிவத்தமிழ் (ஆன்மீகக் கட்டுரைகள், தொகுப்பு) -2008
  • யாழ்ப்பாணத்து நாட்டிய மரபுகள் (நாட்டியக் கட்டுரைகள், வலன்ரீனா இளங்கோவன்) -2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._க._சு._சிவகுமாரன்&oldid=3129947" இலிருந்து மீள்விக்கப்பட்டது