மு. கு. ஜகந்நாத ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. கு. ஜகந்நாத ராஜா (1933 - 2008; இராஜபாளையம் - தமிழ்நாடு) ஒரு சிறந்த பன்மொழி அறிஞர், மொழிபெயர்ப்பாளர், மெய்யியலாளர்.[1] இவர் தமிழ், பாளி, பிராகிருதம், தெலுங்கு, சமசுகிருதம் உட்பட பல மொழிகளை அறிந்திருந்தார். பிராகிருதம், பாளி, தெலுங்கு உட்பட்ட மொழிகளில் இருந்து முக்கிய படைப்புக்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 1989 ஆம் ஆண்டுக்கான தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது இவரது அமுக்தமால்யதா மொழிபெயர்ப்புப் படைப்புக்குக் கிடைத்தது.

ஜகந்நாத ராஜா இலக்கிய, தத்துவ ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்பு நிறுவன அறக்கட்டளை[தொகு]

இவர் அரிய நூல்களைக் கொண்ட ஒரு நூலகத்தை அமைத்திருந்தார். இன்று இந்த நூலகம் "அவருடைய மருமகனும் பேராசிரியருமாகிய கே.ஜி.ராதாகிருஷ்ணனின் நெறியாள்கையில் ‘ஜகந்நாத ராஜா இலக்கிய, தத்துவ ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்பு நிறுவன அறக்கட்டளை’ (J.R.L.R. Trust) பெரும் நிதிச் சுமைகளுக்கு இடையில் நூலகத்தைப் பராமரித்து வருகிறது."[2]

படைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. நடைபயணி
  2. ஜூலை 26 - மு.கு.ஜகந்நாத ராஜா பிறந்தநாள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._கு._ஜகந்நாத_ராஜா&oldid=3772541" இலிருந்து மீள்விக்கப்பட்டது