மு. இராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு.இராமசாமி (4 திசம்பர் 1951) என்பவர் பேராசிரியர், எழுத்தாளர், நாடகக்கலைஞர், நடிகர், திரைப்படத் திறனாய்வாளர் ஆவார்.

பிறப்பு படிப்பும்[தொகு]

இராமசாமியின் தந்தையின் ஊர் பாளையங்கோட்டை; தாயின் ஊர் அம்பாசமுத்திரம். பள்ளிப்படிப்பை பாளையங்கோட்டை அந்தோணியார் பள்ளியிலும் கல்லூரிப்படிப்பை முதுகலை வரை பாளையங்கோட்டைக் கல்லூரியிலும் படித்து முடித்தார். மதுரைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தோற்பாவை நிழற் கூத்து என்னும் கலையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். மதுரைப் பல்கலைக் கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணி புரிந்தார்.

நடத்திய நாடகங்கள்[தொகு]

பாதல் சர்க்காரின் ஸ்பார்ட்டகஸ் நாடகம்

குஜராத்துக் கலவரத்தை விமர்சிக்கும் கட்டுண்ட பிரமோதியஸ்

பெர்டோல்ட் பாரக்கட்டின் கலிலியோ கலீலீ

நந்தன் கதை

தோழர்கள்

கலகக்காரர் தோழர் பெரியார்

துர்கிர அவலம்

பிற பணிகள்[தொகு]

நவீன நாடகக் கலையைத் தொடர்ந்து நடத்தி வந்தார். தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்த பொழுது கூத்துக் களரி என்ற கல்வித் திட்டத்தை உருவாக்கினார். தமிழ்த் திரைப்படங்களுக்கு விமரிசனம் எழுதினார்.சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார்.

உசாத்துணை[தொகு]

விகடன் தடம் இதழ் ஆகத்து 2018

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._இராமசாமி&oldid=3095013" இலிருந்து மீள்விக்கப்பட்டது